என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஓசூரில் போக்குவரத்து நெரிசலில் சிக்கி தவிக்கும் வாகன ஓட்டிகளை படத்தில் காணலாம்.
ஓசூரில் பலத்த மழை: ரெயில்வே கீழ் பாதை வெள்ளக்காடாக மாறியது
- சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
- வாகனங்கள் நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன.
ஓசூர்,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் நேற்று மாலை திடீரென மழை பெய்யத் தொடங்கியது. நேரம் செல்லச் செல்ல மழையின் வேகம் அதிகரித்து சுமார் 1 மணி நேரம் கன மழை பெய்தது.
பலத்த மழையின் காரணமாக ஓசூர் பஸ் நிலையம், பாகலூர் ரோடு சர்க்கிள், ஜி.ஆர்.டி. சர்க்கிள் உள்ளிட்ட இடங்களில் மழைநீர் வெள்ளம்போல் தேங்கி நின்றது. இந்த நிலையில், ஓசூர் ரெயில் நிலையம் அருகில், ரெயில்வே கீழ் பாதை மீண்டும் வெள்ளக்காடாக மாறியது. இதனால் முழங்கால் அளவு மழைநீர் தேங்கி, வாகன ஓட்டிகள், இரு சக்கர வாகனங்களை இயக்கிச் செல்லவும், பொதுமக்கள் நடந்து செல்லவும் மிகவும் சிரமப்பட்டனர். மேலும் நீண்ட நேரம், வாகனங்கள் ஒன்றன் பின் ஒன்றாக நீண்ட தூரம் அணிவகுத்து நின்றன. தொடர்ந்து இரவு முழுவதும் மழை, பரவலாக பெய்தது.இதையடுத்து, ஓசூரில் 20.2 மி.மீ அளவு மழை பதிவானது.






