என் மலர்
உள்ளூர் செய்திகள்

சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் காற்றுடன் கூடிய கனமழை
- சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் இன்று அதிகாலை பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
- வெயிலின் தாக்கத்தால் தவித்துப்போன மக்கள் இந்த திடீர் மழையால் நிம்மதி அடைந்தனர்.
சென்னை:
தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அனேக இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழையும் பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
இதற்கிடையே, சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவில் இருந்தே தூரல் மழை பெய்தது. நேற்று காலை லேசான மழை பெய்ய தொடங்கியது. மதியம் வரை மழை நீடித்தது. இதனால் சென்னை நகரே குளிர்ந்து போனது.
இந்நிலையில், இன்று அதிகாலை முதல் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது.
எழும்பூர், புரசைவாக்கம், வேப்பேரி, அண்ணாசாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும், புறநகர் பகுதிகளிலும் மழை பெய்து வருகிறது.
கடந்த சில தினங்களாக வெயிலின் தாக்கத்தால் தவித்துப்போன மக்கள், இந்த திடீர் மழையால் நிம்மதி அடைந்துள்ளனர்.
Next Story






