search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய உணவுகள் தயாரித்து அசத்திய மாணவிகள்
    X

    கண்காட்சியில் ஆரோக்கியமான உணவுகளை செய்து காட்டிய மாணவிகள்


    உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு ஆரோக்கிய உணவுகள் தயாரித்து அசத்திய மாணவிகள்

    • போடி அரசு பொறியியல் கல்லூரியில் உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது
    • உணவு பொருட்களில் உள்ள கலப்படங்கள் குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    மேலசொக்கநாதபுரம் :

    போடி அரசு பொறியியல் கல்லூரியில் உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு நடைபெற்ற சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

    தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் அரசு பொறியியல் கல்லூரியில் உலக உணவு பாதுகாப்பு தினத்தை முன்னிட்டு சிறப்பு விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது. இந்த விழிப்புணர்வு கருத்தரங்கில் மக்களின் உணவு முறை உணவு தரம் குறித்து கருத்துக்கள் கூறப்பட்டது.

    பாக்கெட் உணவுகளில் உள்ள கலப்படங்கள் குறித்தும், உணவில் கலக்கப்படும் செயற்கை வர்ணங்களால் ஏற்படும் தீமை குறித்தும், உணவு எண்ணெயில் உள்ள கலப்படங்கள் குறித்தும் செயல் விளக்கம் செய்து காண்பிக்கப்பட்டது.

    உடலையும், ஆரோக்கி–யத்தையும் பேணிக்காக்க கலப்படமில்லாத இயற்கை உணவுகள் பயன்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. மேலும் கலப்பட உணவுகள் உடலில் தேவையற்ற பிரச்சினைகள் ஏற்படுத்துவதுடன் பல நோய்களுக்கும் வழிவகை செய்து விடுகிறது என்பதால் பொதுமக்கள் அதனை தவிர்க்க வேண்டும். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்கும் இதனை அறிவுறுத்தி வளர்க்க வேண்டும்.

    பொறியியல் கல்லூரி முதல்வர் திருநாவுக்கரசு தலைமையில் நடைபெற்ற இந்த சிறப்பு கருத்தரங்கில் போடி வட்டார உணவு பாதுகாப்பு துறை அதிகாரி சரண்யா கலந்து கொண்டு மாணவ மாணவியர்களுக்கு ஆரோக்கியமான உணவு வகை குறித்தும் உணவில் கலப்படம் குறித்தும் சிறப்பு விளக்க உரையாற்றினார்.

    இந்த கருத்தரங்கில் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பங்கேற்றனர்.

    Next Story
    ×