என் மலர்
உள்ளூர் செய்திகள்

அரூர் அருகே விஷம் குடித்து தற்கொலை செய்த பெண்ணின் உறவினர்கள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை
- சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.
- காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
அரூர்,
தருமபுரி மாவட்டம் அரூர் அருகேயுள்ள குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் சங்கர்.இவரது மனைவி வைத்தீஸ்வரி. இருவருக்கும் திருமணமாகி 13 ஆண்டுகளாகியுள்ள நிலையில் இரண்டு பெண் மற்றும் ஒரு ஆண் குழந்தை உள்ளனர்.
கடந்த தீபாவளி பண்டிகை அன்று விஷம் அருந்திய வைத்தீஸ்வரியை அரூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்க்கப்பட்டு பின்பு மேல் சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.
தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதுகுறித்து அரூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளிக்கப்பட்டது.
வைத்தீஸ்வரியின் உடலை உடலை கைப்பற்றி அரூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்து பிரேத பரிசோதனை மேற்கொண்டனர். இது குறித்து அரூர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
வைத்தீஸ்வரிக்கும் குடுமியாம்பட்டி கிராமத்தை சேர்ந்த ராமராஜனுக்கும் கள்ளத்தொடர்பு இருந்ததாகவும், ஒருகட்டத்தில் இருவருக்கும் ஏற்பட்ட பிரச்சனை காரணமாக ராமராஜ் பீர் பாட்டிலில் விஷம் கலந்து, அதை குடித்துவிட்டு தான் தற்கொலை செய்துகொள்கிறேன் என தெரிவித்துள்ளார்,
பின்பு இருவரும் விஷத்தை அருந்தி உயிரை மாய்த்துகொள்ளலாம் என முடிவு செய்துள்ளனர். பீர் பாட்டிலில் விஷம் கலந்த மதுவை வைத்தீஸ்வரி மட்டும் அருந்த, ராமராஜ் அதை குடிக்காமல் குடித்ததை போல நாடகமாடியுள்ளார்.
இதன் காரணத்தால் தான் இந்த உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் எனவே இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அரூர் அரசு மருத்துவமனை முன்பு இறந்த பெண்ணின் உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






