என் மலர்

  உள்ளூர் செய்திகள்

  அரூர் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
  X

  லாட்டரி விற்று கைதான நபர்களை படத்தில் காணலாம்.

  அரூர் பகுதிகளில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
  • பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் லாட்டரி சீட்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

  அரூர்,

  அரூர் அருகே உள்ள சுப்பிரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை மற்றும் பள்ளிப்பட்டி பகுதிகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்வதாக வந்த ரகசிய தகவலின் பேரில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

  அப்போது சுப்ரமணிய சிவா கூட்டுறவு சர்க்கரை ஆலை பேருந்து நிறுத்தம் மற்றும் பல்வேறு பகுதிகளில் கேரளா லாட்டரி, மற்றும் ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்தது தெரிய வந்தது.

  இதனையடுத்து ஆன்லைன் மூலம் லாட்டரி சீட்டு விற்பனை செய்ததாக தருமபுரி பகுதியை சேர்ந்த நக்கீரன் மகன் மோகன் (வயது 24), அரூர் பகுதியைச் சேர்ந்த ரஹீம் அப்துல்லா மகன் இனாயதுல்லா (வயது 54) ஆகிய இருவரையும் சிறப்புசப்-இன்ஸ்பெக்டர் சக்திவேல் தலைமையிலான குழுவினர் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

  அவர்களிடம் இருந்து ரூ.1000 பணம், இரண்டு செல்போன்கள், லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட ஆவணங்கள் லாட்டரி சீட்டுகள், மோட்டார் சைக்கிள் பறிமுதல் செய்யப்பட்டது.

  பின்னர் இருவரையும் கைது செய்தனர்.

  Next Story
  ×