என் மலர்
உள்ளூர் செய்திகள்

புனித ஹஜ் பயணத்திற்கு இந்த ஆண்டு சென்னையில் இருந்து விமானம் - ஹஜ் கமிட்டித் தலைவர்
- சென்னையில் இருந்து விமானம் இயக்கப்படும் என ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் கூறினார்.
- புனித ஹஜ் பயணத்திற்கு இந்த வருடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை என்றார்.
சென்னை:
சென்னை ஆழ்வார்பேட்டை இல்லத்தில் முதலமைச்சர் மு.க ஸ்டாலினை ஹஜ் கமிட்டி தலைவர் அபுபக்கர் சந்தித்து, பொங்கல் வாழ்த்து தெரிவித்தார்.
இதையடுத்து, செய்தியாளர்களைச் சந்தித்த அபுபக்கர், புனித ஹஜ் பயணத்திற்கு இந்த வருடம் சென்னையில் இருந்து விமானம் இயக்கப்படும் என தெரிவித்தார்.
மேலும், ஹஜ் பயணத்திற்கு இந்த வருடம் எந்தக் கட்டுப்பாடும் இல்லை எனவும் கூறினார்.
Next Story






