search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் இன்று நடந்த குரூப்-1 முதல்நிலை தேர்வில்   2,640 பேர் ஆப்செண்ட்
    X

    கோப்பு படம்

    திண்டுக்கல்லில் இன்று நடந்த குரூப்-1 முதல்நிலை தேர்வில் 2,640 பேர் ஆப்செண்ட்

    • திண்டுக்கல் மாவட்டத்தில் குரூப்-1 தேர்வுக்காக 28 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன.
    • இதில் 5994 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2640 பேர் தேர்வு எழுத வரவில்லை.

    திண்டுக்கல்:

    தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் குரூப்-1, குரூப்-2, 2ஏ, குரூப்-4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

    இந்நிலையில் டி.என்.பி.எஸ்.சி. நடத்தும் உயர்பதவி தேர்வுகளான குரூப்-1 பதவிகளில் காலியாக உள்ள துணை கலெக்டர், டி.எஸ்.பி, வணிக வரித்துறை உதவி ஆணையர், கூட்டுறவு சங்க துணைப்பதிவாளர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர், மாவட்ட தீயணைப்புத்துறை அதிகாரி உள்ளிட்ட 92 பதவிகளுக்கான முதல்நிலை தேர்வுக்கு இணையதளம் வாயிலாக விண்ணப்பங்கள் வரவேற்கப்பட்டது.

    இத்தேர்வுக்கு ஏராளமான பட்டதாரிகள் விண்ணப்பித்திருந்தனர். தமிழகம் முழுவதும் ஆண், பெண்கள் என மொத்தம் 3 லட்சத்து 22 ஆயிரத்து 416 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 3 லட்சத்து 22 ஆயிரத்து 414 பேர் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டிருந்தனர். கடந்த மாதம் நடைபெறுவதாக இருந்த இந்த தேர்வு சில காரணங்களால் தள்ளிவைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்றது.

    இதற்காக திண்டுக்கல் மாவட்டத்தில் 28 தேர்வு மையங்கள் ஒதுக்கப்பட்டிருந்தன. இதில் தேர்வு எழுத 8 634 பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இதில் 5994 பேர் மட்டுமே தேர்வு எழுத வந்திருந்தனர். 2640 பேர் தேர்வு எழுத வரவில்லை. தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட எந்தவித மின்னணு சாதனங்களும் கொண்டுவர தடைவிதிக்கப்பட்டிருந்தது.

    மோதிரம் அணிந்து வரவும் தடைவிதிக்கப்பட்டிருந்தது. தேர்வு நடைபெறும் இடங்களில் தேர்வர்களை தவிர வேறுயாரும் அனுமதிக்கப்படவில்லை. பலத்த பாதுகாப்புடன் காலை 9.30 மணிக்கு தொடங்கிய இத்தேர்வு மதியம் 12.30 மணிக்கு நிறைவடைந்தது.

    திண்டுக்கல் எஸ்.எம்.பி.எம். பள்ளியில் முதன்மை கண்காணிப்பாளரும், பள்ளி முதல்வருமான ராதாகிருஷ்ணன் மேற்பார்வையில் தேர்வு நடைபெற்றது.

    Next Story
    ×