என் மலர்
உள்ளூர் செய்திகள்

கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர்.
நாளை மாற்று திறனாளிகள் குறைதீர் கூட்டம் - கலெக்டர் தகவல்
- நாளை மாற்றுத்திறனாளிகள் குறைதீர் கூட்டம் நடைபெறும்.
- வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது, ஆட்சித் திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து பயன்பெறலாம்.
தஞ்சாவூர்:
தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தஞ்சை கோட்டத்திற்கு உட்பட்ட கோட்ட அளவிலான மாற்றுத் திறனாளிகளுக்கான குறை தீர்க்கும் நாள் கூட்டம் நாளை (வியாழக்கிழமை ) காலை 11 மணிக்கு தஞ்சை வருவாய் கோட்ட அலுவலகத்தில் நடைபெற உள்ளது.
எனவே தஞ்சை, திருவையாறு, ஒரத்தநாடு, பூதலூர் வட்டத்தில் வசிக்கும் ஆட்சித் திறனாளிகள் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டு பயன்பெறலாம்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Next Story






