search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தவறான சிகிச்சையால் அரசு ஊழியர் கால் துண்டிப்பு-டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை
    X

    கால் துண்டிக்கபட்ட அரசு ஊழியர் உறவினர்களுடன் வந்து கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.

    தவறான சிகிச்சையால் அரசு ஊழியர் கால் துண்டிப்பு-டாக்டர் மீது நடவடிக்கை எடுக்க கலெக்டரிடம் கோரிக்கை

    • இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.
    • வலது காலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலன் அளிக்காததால் வலது கால் துண்டிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு தாலுக்கா வடக்கூர் மேல தெருவை சேர்ந்தவர் ஜோதி. இவர் அரசு பஸ்சில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார்.

    சம்பவதன்று இவர் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த கார் அவர் மீது மோதியது.

    இதில் ஜோதிக்கு பலத்த காயம் ஏற்பட்டது. அந்த வழியாக வந்தவர்கள் அவரை மீட்டு அருகில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் அளிக்கா ததால் அங்கிருந்து வெளியேறி மற்றொரு தனியார் ஆஸ்பத்திரியில் சிகிச்கைக்கு அனுமதிக்கப்பட்டார்.

    அங்கு அவருக்கு வலது காலில் சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும் சிகிச்சை பலன் அளிக்காததால் வலது கால் துண்டிக்கப்பட்டது.

    இந்நிலையில் டாக்டரின் தவறான சிகிச்சையால் தான் தனது கால் துண்டிக்கப்பட்டதாக கூறி அவர் கலெக்டர் அலுவகத்தில் மனு அளித்தார்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி உரிய இழப்பீடு வழங்கவேண்டும் என்று கூறியிருந்தார்.

    Next Story
    ×