என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு கலைக்கல்லூரியில்  வளாக நேர்காணல்: 109 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை
    X

    அரசு கலைக்கல்லூரியில் வளாக நேர்காணல்: 109 மாணவிகளுக்கு பணி நியமன ஆணை

    • பயிற்சி வகுப்புகள் முடிந்த நிலையில், மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணல் நடத்தப்பட்டது.
    • வெற்றி பெற்ற 109 மாணவ, மாணவியர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை கல்லூரியின் முதல்வர் அனுராதா வழங்கினார்.

    கிருஷ்ணகிரி,

    கிருஷ்ணகிரி அரசு ஆடவர் கலைக்கல்லூரியில் மூன்றாம் ஆண்டு மாணவ, மாணவிகளுக்கு நான் முதல்வன் திட்டத்தின் கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தால், வங்கி மேலாண்மை மற்றும் நிதி சேவை வகுப்புகள் நடத்தப்பட்டன.

    பயிற்சி வகுப்புகள் முடிந்த நிலையில், மாணவ, மாணவிகளுக்கு வளாக நேர்காணல் நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெற்ற 109 மாணவ, மாணவியர்களுக்கு வேலை வாய்ப்புக்கான பணி நியமன ஆணைகளை கல்லூரியின் முதல்வர் அனுராதா வழங்கினார்.

    இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வணிக நிர்வாகவியல் துறை உதவி பேராசிரியர் குமரன் மற்றும் பயிற்றுநர் ரவி ஆகியோர் செய்திருந்தனர்.

    Next Story
    ×