என் மலர்
உள்ளூர் செய்திகள்

வெற்றிபெற்ற மாணவிகளூடன் பள்ளி நிர்வாகிகள்.
ராசிபுரம் அரசு பள்ளி மாணவிகள் மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி
- மாவட்ட அளவிலான ஆக்கி போட்டியில் ராசிபுரம் அரசு பள்ளி மாணவிகள் வெற்றிபெற்றனர்.
- இதன்மூலம் அவர்கள் மாநில ஹாக்கி போட்டிக்கு தகுதி பெற்றனர்.
ராசிபுரம்:
நாமக்கல் மாவட்ட அளவிலான 14 வயதுக்கு உட்பட்ட மாணவிகளுக்கான ஹாக்கி போட்டி, ராசிபுரம் அண்ணா சாலை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் நடந்தது.
இதன் இறுதி போட்டியில் ராசிபுரம் அண்ணா சாலை அரசு பள்ளி மாணவிகள், சங்ககிரி சங்கர் மேல்நிலைப் பள்ளி மாணவிகள் மோதினார். இதில் 4-0 என்ற கோல் கணக்கில் ராசிபுரம் அரசு பள்ளி மாணவிகள் வென்று மாநில போட்டிக்கு தகுதி பெற்றனர்.
வெற்றி பெற்ற மாணவிகளையும், பயிற்சி அளித்த பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்களையும் பள்ளியின் பெற்றோர் ஆசிரியர் சங்கத் தலைவர் என்.ஆர்.சங்கர், தலைமை ஆசிரியர் மாதேஸ்வரன், முன்னாள் மாணவர் சங்கத் தலைவர் கேப்டன் சதாசிவம் ஆகியோர் பாராட்டினர்.
Next Story






