என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மீஞ்சூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மதில் சுவர் இடிந்து விழுந்தது: எம்.எல்.ஏ. ஆய்வு
    X

    மீஞ்சூர் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி மதில் சுவர் இடிந்து விழுந்தது: எம்.எல்.ஏ. ஆய்வு

    • இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதாக புகார் தெரிவித்தனர்.
    • பள்ளி மாணவ- மாணவர்களுடன் எம்.எல்.ஏ. கலந்துரையாடி குறைகளை கேட்டு அறிந்தார்.

    பொன்னேரி:

    மீஞ்சூர் அடுத்த காட்டூர் அரசு மேல்நிலைப்பள்ளியில், கடந்த மாண்டஸ் புயல் மழையால் பாதிப்பால், காட்டூர் காலனிக்கு செல்லும் வழியில் உள்ள பள்ளி சுவர் இடிந்து விழுந்தது. இதனால் கால்நடைகள் பாம்பு மற்றும் விஷப்பூச்சிகள் பள்ளிக்குள் நுழைந்து விடுவதாகவும், மேலும் இரவு நேரத்தில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறுவதாகவும், உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் ஊராட்சி நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்தனர்.

    இதனை அடுத்து பொன்னேரி எம்எல்ஏ.வுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. பொன்னேரி எம்.எல்.ஏ. துரை சந்திரசேகர் பள்ளிக்கு சென்று ஆய்வு செய்து பார்வையிட்டார். மேலும் பள்ளி மாணவ- மாணவர்களுடன் கலந்துரையாடி பள்ளியில் குறைகளை கேட்டு அறிந்தார். பள்ளியில் உள்ள சத்துணவு மையத்துக்கு பார்வையிட்டு உணவை பரிசோதித்து பார்த்தார். அப்போது காட்டூர் ஊராட்சி மன்ற தலைவர் செல்வ ராமன், பொதுப்பணித்துறை உதவி செயற்பொறியாளர் கவிதா, சமூக ஆர்வலர் ஜோதீஸ்வரன் மற்றும் ஆசிரியர்கள் பொதுமக்கள் பலர் உடன் இருந்தனர்.

    Next Story
    ×