search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தேசிய கேரம் போட்டியில் தங்கம்   வென்ற மாணவிக்கு பாராட்டு
    X

    தங்கப் பதக்கம் பெற்ற மாணவிக்கு வாழப்பாடியில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்ட போது எடுத்த படம்.

    தேசிய கேரம் போட்டியில் தங்கம் வென்ற மாணவிக்கு பாராட்டு

    • பிளஸ் -2 மாணவி எல்.ராஜேஸ்வரி, புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான 50–-வது சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்றார்.
    • சேலம் மாவட்டத்தில் கேரம் போட்டியில் முதன் முறையாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி எல்.ராஜேஸ்வரிக்கு வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    வாழப்பாடி:

    சேலம் மாவட்டம் வாழப்பாடி அடுத்த பேளூர் சக்தி விகாஸ் பள்ளியின் பிளஸ் -2 மாணவி எல்.ராஜேஸ்வரி, புதுடெல்லியில் நடைபெற்ற தேசிய அளவிலான 50–-வது சீனியர் கேரம் சாம்பியன்ஷிப் போட்டியில், தமிழக பெண்கள் அணியில் சார்பில் பங்கேற்று, தேசிய அளவில் முதலிடம் பிடித்து தங்கப் பதக்கம் வென்றார்.

    சேலம் மாவட்டத்தில் கேரம் போட்டியில் முதன் முறையாக தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்ற மாணவி எல்.ராஜேஸ்வரிக்கு, வாழப்பாடி அரிமா சங்கம், பேளூர் சக்தி விகாஸ் பள்ளி மற்றும் வாழப்பாடி, துக்கியாம்பாளையம், அத்தனுார்பட்டி, பேளூர், ஏ.குமாரபாளையம் கிராம பொதுமக்கள் சார்பில், வாழப்பாடி பேருந்து நிலையம் அருகே உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

    அதனை தொடர்ந்து நடைபெற்ற பாராட்டு விழாவில், வாழப்பாடி ஒன்றிய தி.மு.க செயலாளர் சக்கரவர்த்தி, சேலம் மாவட்ட கேரம் விளையாட்டு சங்க செயலாளர் டேனியல், அரிமா சங்க நிர்வாகி கள் சந்திரசேகரன், தேவராஜன், மருத்துவர் செந்தில்குமார், ஜவஹர், முருகேசன், முருகன், கருணாநிதி, ஷபீராபானு, சுதாபிரபு, சாந்தமீனா, ஒன்றியக் குழு உறுப்பினர் உழவன் முருகன், பேளூர் திருமூர்த்தி, அ.தி.மு.க நகர செயலாளர் வெங்கடேஷ், அத்தனுார்பட்டி தனபால் மற்றும் சக்திவிகாஸ் பள்ளி நிர்வாகிகள், ஆசிரியர்கள், மாணவ –மாணவிகள், ராஜேஸ்வரிக்கு சந்தன மாலை அணிவித்து பரிசுகள் வழங்கி பாராட்டினர்.

    Next Story
    ×