search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தாடாளன் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை
    X

    தங்க கருட சேவை உற்சவத்தில் சிறப்பு அலங்காரத்தில் தாடாளன் பெருமாள் எழுந்தருளினார்.

    தாடாளன் பெருமாள் கோவிலில் தங்க கருட சேவை

    • யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாகபூஜைகள் நடைபெற்றன.
    • தங்க கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மகா பூர்ணாஹூதி, தீபாராதனை நடைபெற்றது.

    சீர்காழி:

    சீர்காழியில் தாடாளன் பெருமாள் கோவில் உள்ளது. 108 திவ்ய தேசத்தலங்களில் 28-வது தலமாக அமைந்துள்ள இந்த கோவிலில் பவித்திர உற்சவம் யாகசாலை பூஜையுடன் தொடங்கியது.

    தொடர்ந்து யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட பவித்திர மாலை பெருமாளுக்கு சாற்றப்பட்டு 8 கால யாக பூஜைகள் நடைபெற்றன.

    5-ம் நாள் காலை உதய தங்க கருட சேவையும், சக்கர த்தாழ் வார் தீர்த்தவாரியும் நடை பெற்றது.

    தொடர்ந்து பெருமாளுக்கு சிறப்பு திருமஞ்சனம் செய்யப்பட்டு, தங்க கருடவாகனத்தில் பெருமாள் எழுந்தருளி மகா பூர்ணா ஹூதி, தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி செய்தனர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் ஆதீனம்.ஸ்ரீனிவாசா ச்சாரியார் பட்டாச்சாரியார், பத்ரி நாராயணன் மற்றும் பக்தர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×