என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஜவுளிக்கடைக்கு வேலைக்கு சென்ற சிறுமி மாயம்- காவல் நிலையத்தில் தந்தை புகார்
- சிறுமியை அவரது தந்தை துணிக்கடையில் வேலை செய்ய விட்டுவிட்டு சென்றார்.
- இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுமியை தேடிவருகின்றனர்.
பெரியபாளையம்:
திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், சூளைமேனி ஊராட்சி, கையடை கிராமத்தைச் சேர்ந்த 17 வயது சிறுமி, தண்டலம் பஜார் வீதியில் உள்ள ஒரு துணிக்கடையில் கடந்த இரண்டு ஆண்டுகளாக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், நேற்று முன்தினம் காலை இருசக்கர வாகனத்தில் சிறுமியை அழைத்து வந்து அவரது தந்தை துணி கடையில் வேலை செய்ய விட்டுவிட்டு சென்றார். ஆனால், அன்று இரவு சிறுமி வீடு திரும்பவில்லை. பல்வேறு இடங்களில் தேடியும் கிடைக்கவில்லை.எனவே, காணாமல் போன தனது மகளை கண்டுபிடித்து தருமாறு சிறுமியின் தந்தை நேற்று இரவு பெரியபாளையம் காவல் நிலையத்தில் புகார் செய்தார். எனவே, போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் தலைமையில் போலீசார் வழக்கு பதிவு செய்து காணாமல் போன சிறுமி குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை செய்து வருகின்றனர்.
Next Story






