என் மலர்
உள்ளூர் செய்திகள்

உழவர் சந்தை அட்டைபெற 2400 விவசாயிகள் விண்ணப்பம்
- 5ஆண்டுகளுக்கு ஒரு முறை உழவர் சந்தை அட்டை புதுப்பிக்கப்படுகிறது.
- வரிசைப்படி பகுதி வாரியாகஅடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.
திருப்பூர்:
திருப்பூர் மாவட்டத்தில் பல்லடம், அவிநாசி, காங்கேயம், ஊத்துக்குளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக விவசாய தொழில் நடந்துவருகிறது.
விவசாயிகள் தாங்கள் விளைவிக்கும் பொருட்களை, திருப்பூர் உட்பட அந்தந்த பகுதி உழவர் சந்தைகள் மூலம் விற்பனை செய்கின்றனர். மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதி விவசாயிகளுக்கு திருப்பூர், தென்னம்பாளையம் சந்தை பிரதான இடமாக உள்ளது. இந்த சந்தையில், காய்கறி விற்பனை செய்ய, உழவர் சந்தை அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். ஒவ்வொரு 5ஆண்டுகளுக்கு ஒரு முறை உழவர் சந்தை அட்டை புதுப்பிக்கப்படுகிறது.
கடந்த 2018க்கு பின் விவசாயிகளுக்கு உழவர் அட்டை வழங்கப்படாததால், பழைய அட்டையையே இன்னும் பயன்படுத்தி வருகின்றனர். மாவட்டம் முழுவதும் உள்ள விவசாயிகள் பலர், உழவர் அட்டைக்காக விண்ணப்பித்து மாதக்கணக்கில் காத்திருப்பதாக குற்றம் சாட்டியுள்ளனர். இதனால் காய்கறி விற்பனையில் ஈடுபட முடியாமல் விவசாயிகள் பலர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இது குறித்து திருப்பூர் தென்னம்பாளையம் உழவர் சந்தை நிர்வாக அலுவலர் கனிமொழி கூறுகையில், ''இதுவரை 2,400 விவசாயிகள் உழவர் சந்தை அட்டைக்காக விண்ணப்பித்துள்ளனர். இதில், 500 அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. வரிசைப்படி பகுதி வாரியாகஅடையாள அட்டை வழங்கப்படும் என்றார்.






