search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தனித்துவ தமிழ்நாடு கொண்டாட்டம் கட்டுரை, பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்
    X

    கோப்பு படம்.

    தனித்துவ தமிழ்நாடு கொண்டாட்டம் கட்டுரை, பேச்சுபோட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்

    • “தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும்” என அறிவிப்பு வெளியிடப்பட்டது.
    • கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கும், மொத்தம் ரூ.44,000 மதிப்புள்ள காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    தேனி:

    தாய்த் தமிழ்நாட்டிற்கு தமிழ்நாடு என பேரறிஞர் அண்ணா பெயர் சூட்டிய ஜூலை 18-ம் நாளினையே "தமிழ்நாடு நாளாக" இனி கொண்டாடப்படும் என முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி "தனித்துவ தமிழ்நாடு என பெயர் சூட்டப்பட்ட 18.07.1967ஆம் நாளினை பெருமைப்படுத்திடும் வகையில் ஆண்டுதோறும் ஜூலை 18-ம் நாள் தமிழ்நாடு நாள் என்ற பெயரில் கொண்டாடப்படும்" என அறிவிப்பு வெளியிடப்பட்டது.

    இவ்வறிவிப்பிற்கிணங்க தேனி மாவட்டத்தில் பள்ளிகளில் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கட்டுரை, பேச்சுப் போட்டிகள் மாவட்ட கலெக்டர் அலுவலகக் கூட்டரங்கில் நடத்தப்பட்டது.

    மாவட்ட அளவிலான கட்டுரைப் போட்டியில் 60 மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இப்போட்டியில் எஸ்.ஆர்.ஜி அரசு உயர்நிலைப்பள்ளி 10-ம் வகுப்பு மாணவி அஸ்விதா முதல் பரிசும், ஆண்டிபட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் மோகன்பாபு 2-ம் பரிசும், சில்லமரத்துப்பட்டி, அரசு மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி ஜனனி 3-ம் பரிசும் பெற்றனர்.

    மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டியில் 55 மாணவ- மாணவிகள் கலந்து கொண்டனர். போட்டியில் உத்தமபாளையம், அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளி 11-ம் வகுப்பு மாணவி காயத்ரி முதல் பரிசும், கெ.கல்லுப்பட்டி, புனித பீட்டர் மேல்நிலைப்பள்ளி 12-ம் வகுப்பு அப்ராபானு 2-ம் பரிசும், வைகை அணை, அரசு மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு மாணவி ரூபிகா 3-ம் பரிசும் பெற்றனர்.

    கட்டுரை, பேச்சுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முதல் பரிசாக ரூ.10000, 2-ம் பரிசாக ரூ.7000, 3-ம் பரிசாக ரூ.5000 என்ற வகையில் மொத்தம் ரூ.44,000 மதிப்புள்ள காசோலைப் பரிசுகள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை தேனி மாவட்ட கலெக்டர் ஷஜீவனா வழங்கினார்.

    Next Story
    ×