என் மலர்
உள்ளூர் செய்திகள்

சி.பா. ஆதித்தனார் உருவ சிலைக்கு ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூரில் சி.பா.ஆதித்தனாரின் உருவ சிலைக்கு மாலை அணிவிப்பு
- ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
- இதபோல் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் சி.பா. ஆதித்தினார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
திருச்செந்தூர்:
தமிழர் தந்தை சி.பா.ஆதித்தனாரின் 119-வது பிறந்தநாள் விழா இன்று கொண்டாடப்பட்டது.இதனை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி வளாகத்தில் உள்ள சி.பா. ஆதித்தனாரின் உருவசிலைக்கு பல்வேறு தரப்பினரும் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
ஆதித்தனார் கல்வி நிறுவனங்கள் சார்பில் நிறுவனங்களின் மேலாளர் வெங்கட் ராமராஜ் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. இதில் கல்வி நிறுவனங்களின் செயலாளர் நாராயண ராஜன், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி செயலாளர் ஜெயக்குமார், ஆதித்தனார் கலை மற்றும் அறிவியல் கல்லூரி முதல்வர் மகேந்திரன், கோவிந்தம்மாள் ஆதித்தனார் மகளிர் கல்லூரி முதல்வர் ஜெயந்தி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் என்ஜினீயரிங் கல்லூரி முதல்வர் வைஷ்லின் ஜிஜி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் கல்வியியல் கல்லூரி முதல்வர் சுவாமிதாஸ், டாக்டர் சிவந்தி ஆதித்தனார் உடற்கல்வியில் கல்லூரி முதல்வர் சாம்ராஜ்,
பத்மஸ்ரீ டாக்டர் பா.சிவந்தி ஆதித்தனார் நர்சிங் கல்லூரி முதல்வர் கலைகுருச்செல்வி, டாக்டர் சிவந்தி ஆதித்தனார் ஆசிரியர் பயிற்சி நிறுவன முதல்வர் மரிய ஜெசிலி, மற்றும் பேராசிரியர்கள் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
இதபோல் பல்வேறு கட்சிகள், அமைப்புகள் சார்பிலும் சி.பா. ஆதித்தினார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.






