search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சாலையோரம் தேங்கி  கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்
    X

    சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பை கழிவுகளை படத்தில் காணலாம்.

    சாலையோரம் தேங்கி கிடக்கும் குப்பைகளால் தொற்று நோய் பரவும் அபாயம்

    • பல நாட்களாக குப்பைகள் அள்ளபடாமல் தேங்கி யுள்ளது.
    • நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

    தருமபுரி,

    தருமபுரி ஒன்றியத்திற்குட்பட்ட அ.கொல்ல அள்ளி பஞ்சா யத்தில் 1000-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளது. இந்தப் பகுதிகளில் ஆங்காங்கே குப்பைகள் கொட்டப்பட்டுள்ளது.

    அவ்வப்போது பஞ்சா யத்து நிர்வாகம் குப்பைகளை அல்லாமல் இருப்பதால் தேங்கி கிடக்கிறது. தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளதால் துர்நாற்றம் வீசி பொது மக்களுக்கு வைரஸ் நோய் பரவலும் ஏற்பட்டுள்ளது.

    மேலும் கொசு பெருக்கத்தால் நோய் தொற்று பரவுவதாக பொதுமக்கள் வேதனை தெரிவிக்கின்றனர். மேலும் தனியார் பள்ளிகள் அமைந்துள்ள பகுதிகளிலும் பல நாட்களாக குப்பைகள் அள்ளபடாமல் தேங்கி யுள்ளது.

    இதனால் சுகாதார சீர்கேடு ஏற்பட்டு உள்ளதால் அப்பகுதியில் உள்ள குப்பை கழிவுகளை அள்ளி தூய்மை பணி செய்ய பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    Next Story
    ×