என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒட்டன்சத்திரத்தில் இன்று காந்தி மார்க்கெட் புதிய காய்கனி வளாகம் திறப்பு
    X

    நிகழ்ச்சியில் அமைச்சர் இ.பெரியசாமி பேசினார். அருகில் அமைச்சர் அர.சக்கரபாணி மற்றும் மார்க்கெட் நிர்வாகிகள் உள்ளனர்.

    ஒட்டன்சத்திரத்தில் இன்று காந்தி மார்க்கெட் புதிய காய்கனி வளாகம் திறப்பு

    • ரூ.30 கோடி மதிப்பில் 175 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது.
    • நிகழ்ச்சிக்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார். புதிய மார்க்கெட்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி குத்துவிள க்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார்

    ஒட்டன்சத்திரம்:

    ஒட்டன்சத்திரம் அருகே உள்ள தங்கச்சியம்மாபட்டியில் காந்திமார்க்கெட்டின் புதிய காய்கனி வளாகம் 13 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இங்கு ரூ.30 கோடி மதிப்பில் 175 கடைகள் கட்டப்பட்டுள்ளது. இதன் திறப்புவிழா இன்று நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு உணவுத்துறை அமைச்சர் அர.சக்கரபாணி தலைமை தாங்கினார்.

    புதிய மார்க்கெட்டை கூட்டுறவுத்துறை அமைச்சர் இ.பெரியசாமி குத்துவிள க்கேற்றி திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். நிகழ்ச்சியில் காந்திமார்க்கெ ட் தலைவர் தங்கவேல், கவுரவத்தலைவர் வையாபுரி, பொருளாளர் சீனிவாசன், துணை ச்செயலாளர் கருப்புச்சாமி, செயலாளர் ராசியப்பன், துணைத்தலைவர் உதயம் ராமசாமி உள்பட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    மேலும் வேலுச்சாமி எம்.பி., எஸ்.பி பாஸ்கரன், திண்டுக்கல் ஸ்டேட் பேங்க் மண்டல மேலாளர் மதன், பழனி கிளை மேலாளர் பிரிஸ்கில்லாள், தங்கச்சியம்மாபட்டி ஊராட்சி மன்ற தலைவர் முருகானந்தம், காந்தி மார்க்கெட் ஆலோசனை கமிட்டி ஆறுமுகம், ஒப்பந்ததாரர் சரவணன், அருள்முருகன் காய்கனி கமிஷன் மண்டி உரிமையாளர் ஜெயபாலன், ஏ.கே.எம். வெஜிடபிள் உரிமையாளர்கள் கண்ணன், முருகவேல் உள்பட பலர் கலந்து கெண்டனர்.

    வியாபாரிகள், கணக்கா ளர்கள், தொழிலாளர்கள், சங்கப்பணியாளர்கள், காந்திகாய்கனி மார்க்கெட் கமிசன், ஏஜெண்ட் உரிமையாளர்கள் நலச்சங்கத்தினர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.

    Next Story
    ×