search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நள்ளிரவு முதல் காலை வரை போலீசார் அதிரடி வேட்டை: தருமபுரியில் ரூ.5.77 லட்சத்துடன் சிக்கிய சூதாட்ட கும்பல்
    X

    சூதாட்டத்தில் ஈடுபட்டு கைதானவர்கள்

    நள்ளிரவு முதல் காலை வரை போலீசார் அதிரடி வேட்டை: தருமபுரியில் ரூ.5.77 லட்சத்துடன் சிக்கிய சூதாட்ட கும்பல்

    • 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 21 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.
    • ஒரே நாளில் நடந்த இந்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    அரூர்:

    தருமபுரி மாவட்டம், அரூர் அருகே உள்ள கோட்டப்பட்டி பகுதிகளில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சூதாட்டக்காரர்கள் சூதாட்டம் நடத்தி வருவதாக அரூர் டி.எஸ்.பி. புகழேந்தி கணேசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் அவருடைய தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரமூர்த்தி, சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர்கள் கமலநாதன், சக்திவேல் மற்றும் போலீசார்கள் நேற்று இரவு 12 மணி முதல் அதிகாலை 5 மணி வரை அதிரடி ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது கோட்டப்பட்டி பெரிய ஏரி மாட்டு கொட்டகையில் பணம் வைத்து சூதாடுவது தெரியவந்தது.

    உடனே அங்கு விரைந்து சென்ற போலீசார் அவர்களை சுற்றி வளைத்து பிடித்தனர். கைது செய்யப்பட்ட 15 பேரின் விவரம் வருமாறு:-

    ராஜா முகமது (வயது 43), சக்கரை (51), கணேசன் (45), சிலம்பரசன் (28), கருணாகரன் (53), குமார் (57), மகராமூர்த்தி (51), அஜித் (26), பழனிசாமி (52), வினோத்குமார் (33), தனபால் (49), செல்வம் (52), ராஜா (65), கலையரசன் (32), பெரியசாமி (46).

    இவர்கள் சேலம், புதுக்கோட்டை, திருவண்ணாமலை, திருப்பத்தூர் உள்ளிட்ட பல மாவட்டங்களை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

    மேலும் தலைமறைவான கன்ஸ்வாட்டர், அஜித், குமார், சங்கர், தங்கப்பா, குப்பன், ராஜகோபால் ஆகியோரை தேடி வருகின்றனர்.

    கைதானவர்களிடம் இருந்து ரூ.5,77,345 ரொக்கப்பணம் பறிமுதல் செய்யப்பட்டது. அத்துடன் 2 சொகுசு கார்கள், 6 இருசக்கர வாகனங்கள், 21 செல்போன்கள் ஆகியவற்றையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

    ஒரே நாளில் நடந்த இந்த போலீசாரின் அதிரடி நடவடிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    Next Story
    ×