என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பேரிகை பேருந்து நிலையத்திலிருந்து  கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை
    X

    பேருந்துகள் குறைவால் தனியார் வாகனங்கள் நிற்கும் இடமாக மாறி வரும் பேரிைக பேருந்து நிலையம்.

    பேரிகை பேருந்து நிலையத்திலிருந்து கூடுதல் பேருந்துகளை இயக்க பொதுமக்கள் கோரிக்கை

    • பேருந்துகள் மட்டுமே வந்து செல்வதால் பேருந்து நிலைய வளாகத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது.
    • நகர பேருந்து வழித்தடம் அமைத்தால் மாணவர்கள் பள்ளி சென்று பயிலவும், பொதுமக்கள் தொழிற்சாலை செல்லவும் ஏதுவாக அமையும்.

    சூளகிரி,

    கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி ஒன்றியத்தை சேர்ந்த பேரிகை ஊராட்சி. இந்த ஊராட்சி கர்நாடகா , ஆந்திராவை ஒட்டியே அமைந்து உள்ளதால் தமிகத்தில் இருந்தும், பிற மாநிலத்தில் இருந்தும் பொதுமக்கள், வியாபாரிகள் வாகனம் மூலம் வருவதற்கும், செல்வதற்கும் ஏதுவாக அமைந்து உள்ளது.

    மேலும் இந்த ஊராட்சியில் அரசு மேல்நிலைப் பள்ளிகள், உயர் நிலைப் பள்ளிகள், நடு நிலைப்பள்ளிகள், குடியிருப்புகள், காவல் நிலையம் , செக்போஸ்ட், அரம்ப மருத்துமனை, வருவாய் மற்றும் கிராம அலுவலகங்கள், மார்க்கெட், வணிக கடைகள், புண்ணிய ஸ்தலங்கள் என உள்ளதால் மாணவர்கள், பொதுமக்கள் தினமும் 7000-க்கும் மேற்பட்டோர் வந்து செல்கின்றனர்.

    இங்கு அமைந்துள்ள பேருந்து நிலைத்தில் சில பேருந்துகள் மட்டுமே வந்து செல்வதால் பேருந்து நிலைய வளாகத்தில் தனியார் வாகனங்கள் நிறுத்தும் இடமாக மாறி வருகிறது. இதனால் பொதுமக்கள் அவதி படுகின்றனர்.

    இந்த பேருந்து நிலையத்தை மையமாக கொண்டு அருகே உள்ள மாலுர், மாஸ்த்தி, அத்தி முகம், வெங்கடேசபுரம், காட்டுநாயக்கன தொட்டி, நெரிகம், கும்பளம், பி.குருபரப்பள்ளி, பண்ணப்பள்ளி ஆகிய ஊராட்சிகளுக்கு நகர பேருந்து வழித்தடம் அமைத்தால் மாணவர்கள் பள்ளி சென்று பயிலவும், பொதுமக்கள் தொழிற்சாலை செல்லவும் ஏதுவாக அமையும் என கோரிக்கை விடுக்கின்றனர்.

    Next Story
    ×