என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஒய்.பிரகாஷ்.எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஷ்வரி, ஓசூர் சப்-கலெக்டர் தேன்மொழி ஆகியோர் ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.
ஓசூர் கெலவரப்பள்ளி அணையில் இருந்து முதல்போக பாசனத்திற்காக தண்ணீர் திறப்பு
- ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக இன்று காலை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
- இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 22 கிராமங்களில் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும்.
ஓசூர்,
தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டா லின் உத்தரவுப்படி, ஓசூர் கெலவரப்பள்ளி அணையிலிருந்து முதல் போக பாசனத்திற்காக இன்று காலை தண்ணீர் திறந்துவிடப்பட்டது.
இதில், ஒய் பிரகாஷ்.எம்.எல்.ஏ., மாவட்ட வருவாய் அலுவலர் ராஜேஷ்வரி, ஓசூர் சப்-கலெக்டர் தேன்மொழி, ஆகியோர் கலந்துகொண்டு, அணையிலிருந்து தண்ணீரை திறந்து வைத்தனர்.
இதன் மூலம் ஓசூர் மற்றும் சூளகிரி பகுதியை சேர்ந்த 22 கிராமங்களில் 8,000 ஏக்கர் விவசாய நிலங்கள் பயன்பெறும். மேலும் இந்த நிகழ்ச்சியில், தாசில்தார் கவாஸ்கர், துணை மேயர் ஆனந்தய்யா உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Next Story






