என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தையை மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் அழைத்து சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து கண் கண்ணாடி, மரக்கண்றுகள் மற்றும் பெட்டகம் வழங்கினார்.
2 குழந்தைகளுக்கு இலவச அறுவை சிகிச்சை
- மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவ சமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
- குழந்தைக்கு இரு கண்களிலும் பிறவி கண்புரை இருப்பதாக கண்டறியப்பட்டது.
தருமபுரி,
தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்துத் துறையின் சார்பில் அரூர் வட்டம், புதுக்கோட்டை சரடு கிராமத்தில் வசிக்கும் இரண்டு குழந்தைகளுக்கு முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவ சமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது.
இவ்விரண்டு குழந்தைகளையும் மாவட்ட கலெக்டர் சாந்தி நேரில் அழைத்து சிகிச்சை முறைகள் குறித்து கேட்டறிந்து கண் கண்ணாடி, மரக்கண்றுகள் மற்றும் பெட்டகம் வழங்கினார்.
தருமபுரி மாவட்டம், அரூர் வட்டம், தீர்த்தமலை அருகில் உள்ள மொண்டு குழி கிராமத்தில் வசிக்கும் ஆதிதிராவிடர் வகுப்பைச் சார்ந்த கூலி தொழிலாளி கருணாகரன், மணிலா தம்பதிக்கு இரண்டாவதாக பிறந்த பெண் குழந்தைக்கு சரியாக கண் திறக்க முடியாத காரணத்தால் 25.11.2022 அன்று அரசு ஆரம்ப சுகாதார நிலையம் தீர்த்தமலைக்கு வந்தார்கள். அங்கு கண் பரிசோதனை செய்த பொழுது குழந்தைக்கு இரு கண்களிலும் பிறவி கண்புரை இருப்பதாக கண்டறியப்பட்டது.
இரு நாட்களில் கோவை அரவிந்த் கண் மருத்துவமனையில் அந்த குழந்தைக்கு சிறப்பு கண் மருத்துவர் மூலம் அனைத்து கண் பரிசோதனைகளும் மேற்கொள்ளப்பட்டது. தற்போது குழந்தைக்கு கண் பார்வை கிடைத்து நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளது.
மேலும், அரூர் வட்டம், கோட்டப்பட்டி அருகேயுள்ள புதுக்கோட்டை சரடு கிராமத்தில் வசிக்கும் வெங்கடேசன் மகள் ரித்திகா (வயது 7) என்பவருக்கு கண் பரிசோதனை முகாமில் இளம் வயதிலிருந்து வலது கண்புரை இருப்பது தெரிய வந்தது.
பிறகு சிறுமிக்கு 12.09.2022 அன்று கண் அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. தற்போது சிறுமி ரித்திகாவுக்கு வலது கண்ணில் பார்வை கிடைத்துள்ளது.
இந்த இரண்டு குழந்தை களுக்கும் முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் மூலம் இலவசமாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. இவ்விரண்டு குழந்தைகளை யும் மாவட்ட கலெக்டர் நேரில் சந்தித்து வாழ்த்தினார்.
மேலும், குழந்தைகளுக்கு கண் பார்வை திரும்ப பெற உதவியாக இருந்த தருமபுரி துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள், தீர்த்தமலை அரசு ஆரம்ப சுகாதார நிலைய வட்டார மருத்துவ அலுவலர் மற்றும் தீர்த்தமலை வட்டார கண் மருத்துவ உதவியாளருக்கும் பாராட்டுகள் தெரிவிக்கப்பட்டது.






