search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி முகாம் - கலெக்டர் தகவல்
    X

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ்

    மாணவர்களுக்கு கோடைகால இலவச பயிற்சி முகாம் - கலெக்டர் தகவல்

    • பல்லாங்குழி, சொக்கட்டான், ஆடு புலிஆட்டம், முதலான விளையாட்டுகள் நடைபெற உள்ளன.
    • பெயர்களை நாளை ( வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்ப தாவது :-

    "இல்லம் தேடிக்கல்வி" மற்றும் பள்ளிகளில் பயிலும் 13 வயதுக்குட்பட்ட மாணவ-மாணவிகள் தங்கள் கோடை விடுமுறையைப் பயனுள்ள வழிகளில் செலவிடத் தக்க வகையில், தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில் கோடை கால இலவசப் பயிற்சி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    வருகிற 14-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை ) முதல் 18-ந் தேதி ( வியாழக்கிழமை ) வரை நாள்தோறும் காலை 9 மணி முதல் மதியம் 12 மணி வரை நடைபெற உள்ள இம்முகாமில், அழகிய கையெழுத்துப் பயிற்சி, ஓவியப் பயிற்சி முதலானவை இலவசமாக வழங்கப் பட உள்ளன. மேலும் பல்லாங்குழி, சொக்கட்டான், ஆடு புலிஆட்டம், பம்பரம் விடுதல், சிலம்பாட்டம், செஸ், சுண்டாட்டம், குதியாட்டம் (ஸ்கிப்பிங்) முதலான விளையாட்டுகள் நடைபெற உள்ளன.

    இம்முகாமில் பங்கேற்க விரும்பும் குழந்தைகளின் பெற்றோர், தங்கள் குழந்தைகளின் பெயர், வயது, படிக்கும் வகுப்பு முதலான விவரங்களைத் தஞ்சாவூர் மாவட்ட மைய நூலகத்தில், நூலகரிடம் நேரிலோ அல்லது 99764 27038, 94448 60511 ஆகிய புலன (வாட்ஸ் ஆப்) எண்களிலோ, பதிவு செய்து கொள்ளலாம்.

    பங்கேற்கும் குழந்தைகள் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கப்படும். பெயர்களை நாளை ( வெள்ளிக்கிழமை ) மாலை 5 மணிக்குள் பதிவு செய்ய வேண்டும்.

    14 ஆம் தேதி காலை 9 மணி முதல் 12 மணி வரை நூலக வாசிப்பு நடைபெறும். 15-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை வண்ணம் தீட்டுதல் நடைபெறும். இதையடுத்து 10.30 மணி முதல் 11.30 மணி வரை சதுரங்கம், ஸ்கிப்பிங் , 11.30 முதல் 12 மணி வரை நூலக வாசிப்பு நடைபெறும்.

    16-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை அழகிய கையெழுத்துப் போட்டி, 10 மணி முதல் 11 மணி வரை கேரம் பலகை, பல்லாங்குழி, ஆடுபுலி ஆட்டம் நடைபெறும்.

    17-ந் தேதி காலை 9 மணி முதல் 10 மணி வரை சிலம்பம், 10 மணி முதல் 11 மணி வரை கதைசொல்லல், ஓவியம் நடைபெறும்.

    18-ந் தேதி காலை 9 மணி முதல் 10.30 மணி வரை கோலாட்டம், கும்மி அதனைத் தொடர்ந்து 11 மணிக்கு மேல் நிறைவு விழா நடைபெறும். அப்போது சான்றிதழ் வழங்கப்படும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×