என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மஞ்சங்காரணையில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரியின் நடமாடும் இலவச மருத்துவ முகாம் சேவை வாகனம்
    X

    மஞ்சங்காரணையில் வேல்ஸ் மருத்துவக் கல்லூரியின் நடமாடும் இலவச மருத்துவ முகாம் சேவை வாகனம்

    • பல்கலைக்கழக வேந்தர் ஐசரி கணேஷ் மருத்துவ முகாம் சேவை வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார்.
    • கனரா வங்கியின் இயக்குனர் நளினி பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்றார்

    பெரியபாளையம்:

    திருவள்ளூர் மாவட்டம், எல்லாபுரம் ஒன்றியம், பெரியபாளையம் அருகே மஞ்சங்காரணையில் வேல்ஸ் மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் சேவா பாரதி இயக்கம் இணைந்து நடமாடும் இலவச மருத்துவ முகாம் சேவையை துவக்கியுள்ளது. இதற்காக நடமாடும் மருத்துவ வாகனத்தை கனரா வங்கி தனது சிஎஸ்ஆர் நிதியில் வழங்கி உள்ளது. இம்மாவட்டத்தில் மருத்துவ வசதி இல்லாத, மிகவும் பின்தங்கிய கிராமப்புற, ஏழை எளிய மக்களுக்காக இந்த நடமாடும் மருத்துவ முகாம் சேவை வாகனம் மூலம் மருத்துவ சேவை வழங்கப்படும்.

    இந்நிகழ்ச்சிக்கு, வேல்ஸ் கல்விக் குழுமத்தின் நிறுவனத் தலைவரும், வேல்ஸ் பல்கலைக்கழக வேந்தருமான டாக்டர் ஐசரி கே.கணேஷ் தலைமை தாங்கி நடமாடும் இலவச மருத்துவ முகாம் சேவை வாகனத்தை கொடி அசைத்து துவக்கி வைத்தார். இதில், கனரா வங்கியின் இயக்குனரும், சார்ட்டட் அக்கவுண்டன்டுமான நளினி பத்மநாபன் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு நிகழ்ச்சியை குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.

    கனரா வங்கியின் துணைப் பொது மேலாளர் ஐ.ஜெகதீசன்,ராஷ்ட்ரிய சேவா பாரதி பொருளாளர் சந்திரசேகர், ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்க மாவட்ட தலைவர் ஜெயபால் ஆகியோர் கலந்து கொண்டு வாழ்த்துரை வழங்கினர். இதில், சிறப்பு விருந்தினராக ராஷ்ட்ரிய சுயம்சேவாக் சங்கத்தின் தென் மண்டல மக்கள் தொடர்பு அமைப்பாளர் பி.பிரகாஷ் கலந்து கொண்டு நடமாடும் இலவச மருத்துவ முகாம் சேவை வாகனத்தின் பயன்களை விளக்கி கூறி சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில், சேவா பாரதி மாநில தலைவர் ராபு மனோகர், சிவராமன், ரகு மனோகர், கல்லூரி டீன் டாக்டர் குமுதா, மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளை சேர்ந்த மக்கள் பிரதிநிதிகள், முக்கிய பிரமுகர்கள், வியாபாரிகள், தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர். முன்னதாக அனைவரையும் நாராயணன் வரவேற்றார். முடிவில், டாக்டர் சதீஷ் நன்றி கூறினார்.

    Next Story
    ×