search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    பாளை அருகே ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் இலவச கண்சிகிச்சை முகாம்
    X

    பாளை அருகே ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. ஏற்பாட்டில் இலவச கண்சிகிச்சை முகாம்

    • ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தினர்.
    • கிராம மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களை வழங்கினார்.

    நெல்லை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொருளாளரும், நாங்குநேரி சட்டமன்ற உறுப்பினருமான ரூபி மனோகரன் எம்.எல்.ஏ., தொகுதியின் வளர்ச்சிக்காக பல்வேறு நலத்திட்டங்களையும், உதவிகளையும் செய்து வருகின்றார்.

    அதனடிப்படையில் எம்.எல்.ஏ. ஏற்பாட்டின் பேரில் பாளையங்கோட்டை ஒன்றியம், பாளையங்கோட்டை வடக்கு வட்டாரத்திற்கு உட்பட்ட கீழநத்தம் பஞ்சாயத்தில் உள்ள கீழநத்தம் தெற்கூர், கீழநத்தம் மேலூர், வடக்கூர், ஆர்.சி.சர்ச் கிராம மக்கள் பயன்பெறும் வகையில் கிராமங்கள் தோறும் மக்களை தேடி சட்டமன்ற உறுப்பினர் என்ற வகையில் டாக்டர் ரூபி மனோகரன் சாரிடபிள் டிரஸ்ட், நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை இணைந்து இலவச கண் சிகிச்சை பரிசோதனை மருத்துவ முகாம் நடத்தினர். இதில் ஏராளமான கிராம மக்கள் கலந்து கொண்டு சிகிச்சை பெற்றனர்.

    மேலும் எம்.எல்.ஏ.விடம் கிராம மக்கள் பல்வேறு கோரிக்கைகளை வைத்தனர். அனைத்து கோரிக்கைகளை ஏற்று உரிய நடவடிக்கையும் எடுப்பதாக ரூபி மனோகரன் எம்.எல்.ஏ. கூறினார். கிராம மக்களை ஊக்குவிக்கும் விதமாக பல்வேறு நலத்திட்டங்களையும், நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

    பின்னர் கிராம மக்கள் அனைவருக்கும் கூட்டாஞ்சோறு வழங்கி அவர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவு உண்டார்.நிகழ்ச்சியில் நாங்குநேரி தொகுதி பொறுப்பாளர் அழகியநம்பி, கீழநத்தம் பஞ்சாயத்து தலைவர் அனுராதா ரவிமுருகன், மாநில மகிளா காங்கிரஸ் பொதுச்செயலாளர் குளோரிந்தால், மாவட்ட துணை தலைவர் செல்லப்பாண்டி, பாளை வடக்கு,மேற்கு கிழக்கு,தெற்கு மற்றும் நாங்குநேரி வடக்கு வட்டார காங்கிரஸ் கமிட்டியின் தலைவர்கள் கனகராஜ், கணேசன், சங்கரப் பாண்டியன், நளன், அம்புரோஸ் மற்றும் ஒன்றிய கவுன்சிலர் தெய்வாணை கனகராஜ், காங்கிரஸ் நிர்வாகிகள் ஜேம்ஸ்போர்டு, பெருமாள் தேவராஜ், நடராஜன், முத்துராமலிங்கம் முனிஸ்வரன், சாமுவேல் மற்றும் நெல்லை அகர்வால் கண் மருத்துவமனை டாக்டர்கள், செவிலியர்கள், கீழநத்தம் கிராம பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

    Next Story
    ×