என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்
    X

    வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேருக்கு ரூ.1 லட்சம் அபராதம்

    • வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து கைதுசெய்தனர்.
    • அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    பாப்பிரெட்டிப்பட்டி,

    வனச்சரக அலுவலர் பழனிவேல் தலைமையில் பிரிவு வனவர் ராகுல், வனக்காப்பாளர்கள் சிவா, ராஜா, முருகன், வேணு, வனக்காவலர் பாலு அடங்கிய குழுவினர் சேலம் வனக்கோட்டம் பொம்மிடி பிரிவிற்குட்பட்ட ஏரிமலை வனப்பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது வனப்பகுதிக்குள் அத்துமீறி நுழைந்து வனவிலங்குகளை வேட்டையாட முயன்ற 4 பேரை சுற்றிவளைத்து பிடித்து கைதுசெய்தனர்.

    விசாரணையில் அவர்கள் சேலம் உத்தமசோழபுரத்தை சேர்ந்த கரியராமன் (வயது 34), சுப்ரமணி (55), சவுந்தர்ராஜன் (34), வெங்கடேசன் (43) என்பது தெரியவந்தது. அவர்களிடம் இருந்து 4 இருசக்கர வாகனம், வலை, கொம்புகள், கூர்மையான ஆயுதம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

    மேலும் அவர்களுக்கு தலா ரூ.25 ஆயிரம் வீதம் ரூ.1 லட்சம் அபராதம் விதிக்கப்பட்டது.

    Next Story
    ×