search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா
    X

    தருமபுரம் ஆதீனம் அடிக்கல் நாட்டினார்.

    சீர்காழி சட்டைநாதர் கோவில் கும்பாபிஷேகத்திற்கு அடிக்கல் நாட்டு விழா

    • திருஞானசம்பந்தருக்கு இக்கோவிலில் தனி சன்னதி உள்ளது.
    • வருகிற மே மாதம் 24-ந் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.

    சீர்காழி:

    மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான சட்டநாதர் தேவஸ்தானம் திருநிலை நாயகி அம்பாள் சமேத பிரம்மபுரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது.

    இக்கோவிலில் சிவபெருமான் சுயம்புவாக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். தேவாரப் பாடல் பெற்ற 274 சிவாலயங்களில் 14 வது தலமான இக்கோவில் சோழர் கட்டிடக்கலை அமைப்பைக் கொண்டது.

    இங்கு பிரம்ம தீர்த்தம் உள்ளிட்ட 22 தீர்த்தங்கள் அமைந்துள்ளன. இக்கோவிலில் சுவாமி பிரம்மபுரீஸ்வரர், தோனியப்பர், சட்டநாதர் என மூன்று நிலைகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார். திருஞானசம்பந்தருக்கு இக்கோவில் தனி சன்னதி அமையப் பெற்றுள்ளது.

    சட்ட நாதர் கோவிலின் திருப்பணிகள் தற்போது முழு வீச்சில் நடைபெற்று வருகின்றன. திருப்பணிகளை விரைந்து முடித்து மே மாதம் 24 ஆம் தேதி கும்பாபிஷேகம் நடத்த தருமபுரம் ஆதீனம் முடிவு செய்துள்ளார்.

    இந்நிலையில் சீர்காழி சட்டநாதர் கோவிலுக்கு வந்த தருமபுரம் ஆதீனம் 27வது குருமா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார் சுவாமிகள் சுவாமி தரிசனம் செய்த பின்னர் கிழக்கு கோபுரத்திற்கு முன்பு தோரண வாயில் அமைப்பதற்கான பூமி பூஜை செய்து, அடிக்கல் நாட்டி, பணிகளை தொடங்கி வைத்தார்.

    இந்நிகழ்ச்சியில் கோவில் கண்காணிப்பாளர் செந்தில், வக்கீல் பாலாஜி, அரசு மருத்துவமனை மருந்தா–ளுநர் முரளி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×