என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    வக்கீல் தொழில் போலிகளின் கைகளில் சிக்கிவிடக்கூடாது   முன்னாள் நீதிபதி கிருபாகரன் பேச்சு
    X

    கருத்தரங்கில் முன்னாள் நீதிபதி கிருபாகரன் பேசினார்.

    வக்கீல் தொழில் போலிகளின் கைகளில் சிக்கிவிடக்கூடாது முன்னாள் நீதிபதி கிருபாகரன் பேச்சு

    • உதவியாளர்கள், டாஸ்மாக்கில் வேலை செய்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என பலரும் சட்டபட்டத்தை வாங்கி வந்து வக்கீல்களாக செயல்படுகின்றனர்.
    • தீவிர நடவடிக்கைகள் எடுத்தால்தான் வக்கீல்கள் தொழில் மேம்படும். இல்லையென்றால் போலிகளின் கையில் சென்று விடும் அடுத்த தலைமுறைக்கு இந்த தொழில் செல்லும்போது குற்றவாளியின் கையில் வக்கீல் தொழில் இருக்கும். சமுதாயத்தை காப்பதற்கு சட்டப்படிப்பு அவசியமானது.

    திண்டுக்கல்:

    திண்டுக்கல் வக்கீல்கள் சங்கம் சார்பில் போலி வக்கீல்களை தடுப்பது குறித்து கருத்தரங்கு நடைபெற்றது. வக்கீல் சங்க தலைவர் மூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் குமரேசன் முன்னிலை வகித்தார். ஐகோர்ட்டு மதுரை கிளை மூத்த வக்கீல் கிருஷ்ணவேணி, முன்னாள் அரசு தலைமை வக்கீல் ஜோதி ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.

    இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட ஐகோர்ட்டு முன்னாள் நீதிபதி கிருபாகரன் பேசியதாவது:-

    கல்லூரிக்கு செல்லாமல் வேறு மாநிலங்களில் இருக்கும் கல்லூரிகளில் சட்ட பட்டத்தை பணம் கொடுத்து வாங்கும் கூட்டம் இங்கு உள்ளது. உதவியாளர்கள், டாஸ்மாக்கில் வேலை செய்பவர்கள், ஆட்டோ டிரைவர்கள், ஓய்வு பெற்றவர்கள் என பலரும் சட்டபட்டத்தை வாங்கி வந்து வக்கீல்களாக செயல்படுகின்றனர்.

    தமிழகத்தில் 30 சதவீத வக்கீல்கள் போலி என தகவல்கள் வெளியாகி உள்ளது. போலி கல்லூரிகள் ஒழிய வேண்டும், சட்டக்கல்லூரிகளில் பணிபுரியும் பேராசி ரியர்கள், மாணவர்கள் குறித்த விவரங்களை இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும். மேலும் பயோமெட்ரிக் பதிவு மூலம் கல்லூரிக்கு முறையாக வருகிறார்களா? என கண்காணிக்க வேண்டும்.

    அப்போதுதான் போலியாக பட்டம் பெற்றவர்கள் விவரம் தெரிய வரும். தீவிர நடவடிக்கைகள் எடுத்தால்தான் வக்கீல்கள் தொழில் மேம்படும். இல்லையென்றால் போலிகளின் கையில் சென்று விடும் அடுத்த தலைமுறைக்கு இந்த தொழில் செல்லும்போது குற்றவாளியின் கையில் வக்கீல் தொழில் இருக்கும். சமுதாயத்தை காப்பதற்கு சட்டப்படிப்பு அவசியமானது. ஆனால் அது போலிகளின் கையில் சிக்கிக்கொள்ளக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்

    Next Story
    ×