என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கூக்கால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்கும் வனத்துறையினர் வாழ்வாதாரம் இழந்து வரும் உள்ளூர் மக்கள்
    X

    தண்ணீர் ஆர்ப்பரித்து கொட்டும் தூத்தூர் அருவி.

    கூக்கால் அருவிக்கு சுற்றுலா பயணிகள் செல்வதை தடுக்கும் வனத்துறையினர் வாழ்வாதாரம் இழந்து வரும் உள்ளூர் மக்கள்

    • கூக்கால் கிராமத்திற்கு செல்லும் எழில் கொஞ்சும் மலை ப்பாதைகளும் அங்கு அமைந்துள்ள நன்னீர் ஏரியும் காண்போர் மனதை மயக்கும் இடங்களாக உள்ளது.
    • அரசு தலையிட்டு இப்பகுதி மக்களின் வாழ்வதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் என்றாலே பசுமை போர்த்திய அழகிய மலைத்தொடர்களும் காணும் இடமெல்லாம் குளுமைக்கு குறைவில்லாத காட்சிகளும் அனைவரின் மனதிலும் நிழலாடும். தொடர் விடுமுறை கால ங்களில் ஏற்படும் வழக்க மான நகர்புற சுற்றுலா தலங்களுக்கான நெரிசலை தவிர்த்து மேல்மலை கிரா மங்களில் உள்ள பல்வேறு சுற்றுலாப் பகுதிகள் கடந்த 5 ஆண்டுகளாக, பயணிகள் அதிகம் சென்று திரும்பும் இடமாக மாறியுள்ளது.

    விவசாய வயல்வெளி களுக்கு நடுவே ஓவியக் கோலமிட்டது போன்று வண்ணமயமாக காட்சியளி க்கும் பூம்பாறை கிராமமும் அதன் நடுவே அமைந்துள்ள குழந்தை வேலப்பர் கோவி லும் மேல்மலைகளுக்கு செல்லும் பயணிகள் அனை வரும் எளிதில் காணும் அற்புத காட்சிகளாக அனை வரையும் ஈர்க்கிறது. அதற்கு அடுத்த 2-வது இடத்தில் பசுமை புல்வெளிகளுக்கு நடுவே காட்சியளிக்கும் மன்னவனூர் ஏரியும் அதனை சுற்றியுள்ள காடுகளும், ஏரியின் பரிசல் சவாரியும் உள்ளது.

    3-வதாக கூக்கால் கிராமத்திற்கு செல்லும் எழில் கொஞ்சும் மலை ப்பாதைகளும் அங்கு அமைந்துள்ள நன்னீர் ஏரியும் காண்போர் மனதை மயக்கும் இடங்களாக உள்ளது. அதிலும் குறிப்பாக பசுஞ்சோலைக்காடுகளுக்கு மத்தியில் கூக்கால் கிரா மத்தின் வருவாய் நிலப்பகுதி களுக்குள் அமைந்துள்ள தூத்தூர் அருவி.

    கடந்த 2019 -ம் ஆண்டில் இருந்து பல லட்சக்கணக்கான மக்களை சென்றடைந்து ள்ளது. கடந்த 2-வது ஆண்டுகளில் மட்டும் சுமார் 2 லட்சத்திற்கும் மேற்பட்ட பயணிகள் அண்டை மாநிலங்கள் மட்டுமல்லாது வட இந்தியாவில் இருந்தும் காண வந்து அதனை சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்னர்.

    கூக்கால் கிராமத்தின் தூத்தூர் அருவி, இன்றளவும் தென்னிந்தியாவின் அதிகம் விரும்பும் அருவிகளில் 2-வது இடத்தில் உள்ளதாக இப்பகுதி மக்கள் கூறு கின்றனர்.

    தூத்தூர் அருவியின் பிரம்மாண்டமும், அதன் முன்னர் நிற்கும் பொழுது, உடலை வருடிச்சென்று வீசும் மூலிகைச்சாரலும், பயணிகளின் மனதை கொள்ளை கொண்டு அருவியின் பேரழகை அவர்கள் மேலும் மேலும் ரசிக்க வைக்கிறது. இதனால் கூக்கால் கிராமத்தின் சுற்றுலா வாழ்வாதாரம் வேகமெடுக்கத்து வங்கியு ள்ளது.

    அருவிக்கு அழைத்து செல்ல கிராம மக்கள் சுமார் 100 க்கும் மேற்பட்டோர் சுற்றுலா வழிகாட்டிகளாக குழு அமைத்து அரசின் அனுமதியுடன் பதிவு செய்து அருவியை காணவரும் பயணிகளிடம் கட்டணம் பெற்று 2 ஆண்டுகளாக அருவிக்கு தொடர்ந்து அழைத்து சென்றுள்ளனர்.

    அருவிக்கு சென்று திரும்பும் பயணிகளுக்கு தேவை யான உணவுகளையும் வழங்க, கூக்கால் கிராமத்தில் 10-க்கும் மேற்பட்ட உணவ கங்கள் உருவாகி அவர்களின் உணவுத்தேவையையும் பூர்த்தி செய்துள்ளனர்.

    கூக்கால் கிராம ஏழை விவசாயிகள், கூலி வேலை பார்ப்பவர்கள், வேலை யில்லா வாலிபர்கள் என அனைத்து தரப்பினரின் வாழ்வில் தூத்தூர் அருவி விளக்கேற்றி வைத்து மகிழ்ச்சியில் திளைத்து இருந்த நிலையில் கூக்கால் மக்களின் வாழ்வில் இடியாய் இறங்கியது ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை.

    3 வருடங்களாக அருவிக்கு செல்ல எந்த தடையும் விதிக்காத ஆனை மலை புலிகள் காப்பக வனத்துறை திடீரென்று கடந்த ஜூலை மாத இறுதியில் பயணிகளை அழைத்து செல்லும் சுற்றுலா வழிகாட்டிகளுக்கு கடும் அபராதம் விதித்தும் மீறி செல்பவர்களை மிரட்டியும் சில நேரங்களில் தாக்கியும் வருகின்றனர்.

    இதனால் பாதிக்கப்பட்ட மக்கள் போலீஸ் நிலைய த்தில் புகார் அளித்தனர். ஆனால் புகாரை ஏற்ற போலீசார் வழக்கு பதியா மல் மக்களையும் வனத்துறை யையும் அழைத்து பேச்சுவார்த்தையின் மூலம் சமாதானப்படுத்தியுள்ளது. தொடர் சட்ட ஒழுங்கு சீர்கேட்டிற்கு பின்னர் வருவாய்த்துறையினரும் தூத்தூர் அருவிக்கு சென்று அருவி உள்ள இடம் வருவாய் நிலம் என்று உறுதி செய்துள்ளனர்.

    ஆனாலும் ஆனைமலை புலிகள் காப்பக வனத்துறை இன்றளவும் அந்த அருவிக்கு பயணிகளை செல்ல விடாமல் ஊர்மக்களையும் சுற்றுலா பயணிகளை அச்சுறுத்தி வருவதாக கூக்கால் மக்கள் செய்வ தறியாது உள்ளனர்.

    எனவே இப்பிரச்சினை யில் அரசு தலையிட்டு இப்பகுதி மக்களின் வாழ்வதாரத்தை உறுதி செய்ய வேண்டும் என வலியுறுத்தி உள்ளனர்.

    Next Story
    ×