என் மலர்
உள்ளூர் செய்திகள்

நாலுமாவடி தொடக்கப்பள்ளி மாணவன் ஒருவருக்கு இலவச சீருடைகள், புத்தக பைகள் ஆகியவற்றை மோகன் சி. லாசரஸ் வழங்கிய காட்சி.
நாலுமாவடி தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைகள், பைகள் -மோகன் சி.லாசரஸ் வழங்கினார்
- ஸ்ரீ ஞானானந்த சம ரச சன்மார்க்க தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைகள்,பைகள் வழங்கும் விழா நடைபெற்றது.
- இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை தாங்கி மாணவ- மாணவிகளிடம் உரையாடினார்.
நாசரேத்:
நாசரேத் அருகே உள்ள நாலுமாவடி புதுவாழ்வு சங்கம் சார்பில் ஸ்ரீ ஞானானந்த சம ரச சன்மார்க்க தொடக்கப்பள்ளி மாணவ-மாணவிகளுக்கு இலவச சீருடைகள்,பைகள் வழங்கும் விழா நடைபெற்றது. நாலுமாவடி இயேசு விடுவிக்கிறார் ஊழியங்களின் நிறுவனர் மோகன் சி. லாசரஸ் தலைமை தாங்கி இலவச சீருடைகள்,புத்தக பைகளை வழங்கி மாணவ- மாணவிகளிடம் உரையாடினார். முன்னதாக பள்ளி தலைமையாசிரியை அவ்வை வரவேற்று பேசினார். பள்ளி செயலாளர் அழகேசன், பள்ளி மேலாளர் கலைராஜன், முன்னாள் மேலாளர் சேகர், தனசேகரன், மணத்தி எட்வின், ஆனந்தபுரம் ரஞ்சி ஆரோன் மேல் நிலைப்பள்ளி முன்னாள் எழுத்தர் பொன்னு,கீழநாலு மாவடி பாபு,சுதாகர், லோக நாதன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Next Story