search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    முதல்வர் கோப்பை போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு
    X

    முதல்வர் கோப்பை போட்டிக்கு விண்ணப்பிக்க கால அவகாசம் நீட்டிப்பு

    • திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3,010பேர் பதிவு செய்துள்ளனர்.
    • போட்டியில் பங்கேற்க ஜனவரி 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருப்பூர் :

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில், முதல்வர் கோப்பை க்கான மாவட்ட விளையாட்டுப்போட்டி ஒவ்வொரு மாவட்டத்திலும், ஜனவரி மாத இறுதியில் நடத்தப்பட உள்ளது. கடந்தாண்டு பள்ளி, கல்லூரி மாணவர்கள் மட்டுமே முதல்வர் கோப்பை போட்டியில் பங்கேற்று வந்த நிலையில் நடப்பாண்டு அரசு ஊழியர், மாற்றுத்திறனாளிகள் போ ட்டியில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

    இப்போட்டியில் பங்கேற்க ஜனவரி 23-ம் தேதிக்குள் விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதுதொடர்பாக விளையாட்டுத்துறை அலுவலர்கள் கூறியதாவது:- பொதுப் பிரிவுக்கு கபடி, சிலம்பம், தடகளம், பேட்மிண்டன், வாலிபால் போட்டிகளும், பள்ளி மாணவ, மாணவிகளுக்கு கபடி, சிலம்பம், தடகளம், கூடை ப்பந்து, பேட்மிண்டன், கால்பந்து, ஹாக்கி, டேபிள் டென்னிஸ்,வாலிபால், நீச்சல் போட்டிகளும், அரசு ஊழியர்களுக்கு கபடி, தடகளம், பேட்மிண்டன், சதுரங்கம், வாலிபால் போட்டிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு 50 மீ, 100மீ, ஓட்டம், கபடி உள்ளிட்ட போட்டிகளும் நடத்தப்பட உள்ளன.

    போட்டிகளில் கலந்து கொள்ள ஆர்வம்உள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவு செய்து கொள்ளலாம்.

    திருப்பூர் மாவட்டத்தில் இதுவரை 3,010பேர் பதிவு செய்துள்ளனர். தனிநபர், குழுவுக்கு பதிவு செய்ய வரும் 23-ம் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

    Next Story
    ×