என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவருக்கு,செலுத்திக்கொண்டதாக பதிவேற்றம்-  நடவடிக்கை எடுக்க ம.தி.மு.க.வலியுறுத்தல்
    X

    தடுப்பூசி செலுத்திக்கொள்ளாதவருக்கு,செலுத்திக்கொண்டதாக பதிவேற்றம்- நடவடிக்கை எடுக்க ம.தி.மு.க.வலியுறுத்தல்

    • நீங்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் வெற்றிகரமாக செலுத்திக்கொண்டு ள்ளீர்கள் என குறுஞ்செய்தி வந்தது.
    • வேடிக்கை என்னவென்றால், அவர் 2-ம் தவணை தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ள வில்லை.

    ஓசூர்,

    ஓசூர் நகர ம.தி.மு.க. செயலாளராக இருப்பவர் குமரேசன். இவரது மொபைலுக்கு, ஓசூர் சீதாராம் நகரில் உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்தது.

    அதில், நீங்கள் 2 தவணை தடுப்பூசிகளையும் வெற்றிகரமாக செலுத்திக்கொண்டு ள்ளீர்கள். அதற்கான சான்றிதழை பதிவிறக்கம் செய்துகொள்ளவும் என்று குறிப்பிடப்பட்டிருந்தது.

    இதில் வேடிக்கை என்னவென்றால், அவர் 2-ம் தவணை தடுப்பூசியை இன்னும் செலுத்திக்கொள்ள வில்லை. ஆனால், 2- ம் தவணை தடுப்பூசி செலுத்திக்கொண்டதாக பதிவேற்றம் ஆனதால் அதிர்ச்சியடைந்த அவர், உடனடியாக ஆரம்ப சுகாதார நிலையத்தை தொடர்பு கொண்டபோது, அங்கிருந்து அலட்சியமாக பதில் கிடைத்ததாம்.

    எனவே, இதுபோன்று இன்னும் எத்தனை பேருக்கு, தடுப்பூசி செலுத்திக்கொள்ளா மலேயே தவறான தகவல் அனுப்பப்பட்டுள்ளது என்பதை ஓசூர் சப்- கலெக்டர் மற்றும் அரசு மருத்துவனை தலைமை மருத்துவர் ஆகியோர் ஆரம்ப சுகாதார நிலை யத்தில் நேரில் ஆய்வு செய்து விசாரித்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரேசன் வலியுறுத்தியுள்ளார்.

    Next Story
    ×