என் மலர்
உள்ளூர் செய்திகள்

கபிலர்மலையில் பிரசார ஊர்தியை பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்ற போது எடுத்த படம்.
உணவு, ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்டம் விளக்க வாகன பிரசாரம்
- வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட விளக்க பிரச்சார ஊர்தி பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
- கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
பரமத்தி வேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் தாலுகா கபிலர்மலை வட்டார வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பாக உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட விளக்க பிரச்சார ஊர்தி பயன்பாட்டிற்கு விடும் நிகழ்ச்சி நடைபெற்றது. கபிலர்மலை வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் ராதாமணி நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார்.
சிறப்பு விருந்தினராக கபிலர்மலை ஒன்றிய கழக செயலாளரும், ஒன்றிய கவுன்சிலரும், அட்மா மேலாண்மை குழு தலைவருமான சண்முகம் கலந்து கொண்டு கொடி அசைத்து உணவு மற்றும் ஊட்டச்சத்து பாதுகாப்பு திட்ட பிரசார வாகனத்தை பயன்பாட்டிற்கு தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
Next Story






