search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மலர் பூங்காக்கள், வனவிலங்குகள் பண்ணைகள் அமைக்கவேண்டும்:  பாப்பிரெட்டிப்பட்டி வாணியார் நீர்த்தேக்கம் சுற்றுலாத்தலமாக மாறுமா?  -பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    மலர் பூங்காக்கள், வனவிலங்குகள் பண்ணைகள் அமைக்கவேண்டும்: பாப்பிரெட்டிப்பட்டி வாணியார் நீர்த்தேக்கம் சுற்றுலாத்தலமாக மாறுமா? -பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது
    • மாணவர்களை அழைத்து செல்லக்கூடிய குறைந்த செலவு சுற்றுலாத்தலமாகவும் அமையும்.

    பாப்பிரெட்டிப்பட்டி .

    தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டியில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தொலைவில் வாணியார் நீர்த்தேக்கம் உள்ளது. சேர்வராயன் மலை தொடர்களில் இரு மலைகளுக்கு இடையில் 1985-ம் ஆண்டு மறைந்த முதலமைச்சர் எம்.ஜி.ஆரால் இந்த நீர்த்தேக்கம் கட்டப்பட்டது

    இயற்கை எழில் கொஞ்சும் மலைப்பாங்கான பகுதியில், மிகவும் அழ கான தோற்றத்துடன், மிகவும் ரம்மியமாக, அணைக்கு செல்லும் சாலை இருபுறங்களிலும் தென்னந்தோப்பு, பாக்கு தோப்பு, பல வகை பழ தோட்டம், பசுமை போர்த்திய சோலைவனத்திற்குள் செல்வது போல் காணப்படுகின்றது.

    இந்த வாணியார் நீர்த்தேக்கம் சுமார் 35 ஆண்டுகள் ஆகியும் இன்னமும் சுற்றுலாத்த லமாக மாற்றப்படாமல் உள்ளது. நீர்த்தேக்கத்தின் முன் பகுதியில் 100 ஏக்கர் நிலப்பரப்பு முட்புதர்களாகவும், குடிகாரர்கள்,சமூக விரோத செயல்களில் ஈடுபவர்களின் புகலிடமாகவும் இருந்து வருகிறது

    இப்பகுதியில் உள்ள இடங்களை தூய்மை செய்து சுற்றுலாப் பயணிகளை கவரும் வகையில், மலர் பூங்காக்கள், வனவிலங்குகள் பண்ணை, சிறுவர்களை கவரும் விளையாட்டு திடல்கள், தாவரங்களை தெரிந்து கொள்ள தாவரவியல் பூங்கா போன்றவை அமைத்தால் சிறந்த சுற்றுலா தளமாக அமையும் என பொதுமக்களும், சமூக ஆர்வலர்களும் கோரிக்கை வைத்துள்ளனர்

    எனவே மாவட்ட நிர்வாகம் பாப்பி ரெட்டிப்பட்டி, அரூர் ,பொம்மிடி, கடத்தூர் என சுமார் 40 கிலோ மீட்டர் சுற்றளவு பகுதியில் வாழம் மக்களின் சுற்றுலாத்தலமாகவும் ,குறைந்த செலவில் சென்று வரக்கூடிய பொழுதுபோக்கு மையமாகவும் அமையும். மேலும் இப் பகுதியில் உள்ள பள்ளிகள், கல்லூரி, மாணவர்களை அழைத்து செல்லக்கூடிய குறைந்த செலவு சுற்றுலாத்தலமாகவும் அமையும்.

    எனவே மாவட்ட நிர்வாகம் பாப்பி ரெட்டிபட்டி பகுதியில் சுற்றுலாத்தலம் எதுவும் இல்லாததால் இப்ப பகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று வாணியாறு நீர்த்தேக்கத்தை ஒரு சுற்றுலாத்தலமாக மாற்ற வேண்டுமென இப்பகுதி மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    பாதுகாப்பற்ற நிலையில் உள்ள இந்த வாணியாறு நீர் தேக்கத்தை சுற்றி பார்க்க ஏற்கனவே குடும்பம், குடும்பமாக பொதுமக்கள் வந்து செல்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×