search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கம்பத்தில் சமூக இலக்கியப் பேரவை சார்பில் ஐம்பெரும் விழா
    X

    விழாவில் தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத்மிஸ்ரா நூல் வெளியிட ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. பெற்றுக் கொண்டார்.

    கம்பத்தில் சமூக இலக்கியப் பேரவை சார்பில் ஐம்பெரும் விழா

    • சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா உள்பட ஐம்பெரும் விழா நடைபெற்றது.
    • நிகழ்ச்சியில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர், இலக்கிய பேரவையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கம்பம்:

    கம்பத்தில் நண்பர்கள் சமூக இலக்கிய பேரவை மற்றும் சீர் மரபினர் நலச்சங்கம் இணைந்து நடத்திய கம்பத்தின் முதல் நகரத் தலைவர் ராமசாமி நூற்றாண்டு விழா, பேராசிரியர் புதியவனின் நூல் வெளியீட்டு விழா, சாதனை படைத்த மாணவர்களுக்கு பரிசளிப்பு விழா, கவிஞர்களுக்கு பரிசளிப்பு விழா, விளையாட்டு வீரர்களுக்கு பரிசளிப்பு விழா என ஐம்பெரும் விழா நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு பேராசிரியர் செந்தில்குமார் தலைமை தாங்கினார். சமூக இலக்கிய பேரவை செயலாளர் சேகர் வரவேற்றார். தேனி தெற்கு மாவட்ட தி.மு.க. செயலாளர் கம்பம் ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ. உரையாற்றினார். கம்பம் நகர் மன்ற தலைவர் வனிதா நெப்போலியன், கம்பம் நகர தி.மு.க. செயலாளர் வீரபாண்டியன், ராயப்பன்பட்டி எஸ்.யு.எம் பள்ளி தாளாளர் பிரபாகர், கம்பம் ஜமாத் கமிட்டி தலைவர் ஜெயினுலாபுதீன், கம்பம் தூய ஆரோக்கிய அன்னை ஆலய பங்குத்தந்தை செபாஸ்டின் டைட்டஸ், கம்பம் ஆர்.ஆர். இன்டர்நேஷனல் பள்ளி தாளாளர் ராஜாங்கம், த.மு.எ.க.ச. மாநில குழு சிவாஜி, வைகை தொல்லியல் பண்பாட்டுக் கழகம் பாவெல் பாரதி, தொழிலதிபர் அன்பழகன், கவிஞர் பாரதன் உட்பட பலர் பேசினர்.

    தேசிய செட்டியார்கள் பேரவை தலைவர் ஜெகநாத் மிஸ்ரா நூல் வெளியிட ராமகிருஷ்ணன் எம்.எல்.ஏ., ஓய்வு பெற்ற எஸ்.பி. ராமகிருஷ்ணன் ஆகியோர் பெற்றுக் கொண்டனர். நிகழ்ச்சியில் உத்தமபாளையம் ஹாஜி கருத்த ராவுத்தர் கல்லூரி உதவி பேராசிரியர் முகமது ரபிக் என்ற மானசிகன் நூலை அறிமுகம் செய்து பேசினார். கம்பம் முன்னாள் எம்.எல்.ஏ. ராமச்சந்திரன் ஏற்புரை வழங்கினார். நிகழ்ச்சியில் சீர் மரபினர் நலச்சங்கத்தினர், இலக்கிய பேரவையினர், பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×