என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது
    X

    திருவள்ளூர் அருகே கஞ்சா கடத்தி வந்த 5 பேர் கைது

    • இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கோலப்பன்சாவடி மகாலட்சுமி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியை சேர்ந்த வசந்தகுமார், தீபக், வம்சி, தமிழரசன், திருவூரைச் சேர்ந்த சுதன் என்பதும் 1 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பதும் தெரிந்தது.

    திருவள்ளூர்:

    திருவள்ளுரை அடுத்த செவ்வாப்பேட்டை பகுதியில் கஞ்சா விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து இன்ஸ்பெக்டர் டில்லி பாபு மற்றும் போலீசார் அப்பகுதியில் உள்ள கோலப்பன்சாவடி மகாலட்சுமி நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்தின் பேரில் அங்கு நின்று கொண்டிருந்த 5 பேரிடம் சோதனை நடத்தினர். அவர்கள், சென்னை வால்டாக்ஸ் ரோடு பகுதியைச் சேர்ந்த வசந்தகுமார், தீபக், வம்சி, தமிழரசன், திருவூரைச் சேர்ந்த சுதன் என்பதும் 1 கிலோ கஞ்சா கடத்தி வந்திருப்பதும் தெரிந்தது.

    இதையடுத்து அவர்கள் 5 பேரையும் போலீசார் கைது செய்து கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    Next Story
    ×