search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில் முதலுதவி திறன் மேம்பாட்டு பயிலரங்கம்
    X

    தருமபுரி தொன் போஸ்கோ கல்லூரியில் முதலுதவி திறன் மேம்பாட்டு பயிலரங்கம்

    • கல்லூரிச் செயலரும், சமூக பணித்துறைத் தலைவரு மான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார்.
    • நல்வாழ்விற்குத் தேவையான வாழ்வியல் முறைகள் குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.

    தருமபுரி,

    தருமபுரி, தொன் போஸ்கோ கல்லூரியில் சமூக பணித்துறை சார்பில் சமூகப்பணி மேற்கொள்ப வர்களுக்கான சி.பி.ஆர். முதலுதவித்திறன் மேம்பாடு குறித்த பயிலரங்கம் நடை பெற்றது. இந்நிகழ்விற்குக் கல்லூரிச் செயலரும், சமூக பணித்துறைத் தலைவரு மான ராபர்ட் ரமேஷ் பாபு தலைமை வகித்தார். முதல் வர் ஆஞ்ச லோ ஜோசப் முன்னிலை வகித்து வாழ்த்துரை வழங்கினார்.

    இப்பயிலரங்கில் சிறப்பு அழைப்பாளராக சமூக பணித்துறை உதவி பேராசிரியை ஜெமி பிளஸ்சி கலந்து கொண்டு, இருதய சிகிச்சை நோயாளி களுக்கு அவசர காலத்தில் வழங்கப்படும் சி.பி.ஆர். முதலுதவி பயிற்சி மற்றும் நல்வாழ்விற்குத் தேவையான அடிப்படை வாழ்வியல் முறைகள் போன்றவற்றை குறித்து செய்முறை விளக்கம் அளித்தார்.

    இந்நிகழ்வில் கல்லூரித் துணை முதல்வர் முனைவர் பாரதி பெர்னாட்ஷா, பொரு ளாளர் அந்தோணி பாப்பு ராஜ், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர் என பலரும் கலந்து கொண்டனர். மேலும் சமூகப்பணித்துறை இரண்டாம் ஆண்டு மாணவர் ஜோனிபால் கிருபாகரன் இந்நிகழ்வை ஒருங்கிணைத்தார்.

    சமூகப்பணி மேற்கொள் ளும் அனைவருக்கும், அவசர காலத்தில் நோயாளிகளுக்கு வழங்கப் படும் முதலுதவி மற்றும் அடிப்படை நல்வாழ்வு முறைகள் போன்றவற்றை உணர்த்தும் விதமாக அமைந்த இந்நிகழ்வுக் கான ஏற்பாடுகளை துறை பேரா சிரியர்கள் செய்திருந்தனர்.

    Next Story
    ×