என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு கணித ஆசிரியர் சஸ்பெண்டு
    X

    கோப்பு படம்

    மாணவிகள் தற்கொலைக்கு முயன்ற விவகாரம் தலைமை ஆசிரியை உள்பட 5 பேர் மீது வழக்குப்பதிவு கணித ஆசிரியர் சஸ்பெண்டு

    • ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தங்களை ஜாதியைச் சொல்லி திட்டிய தால் மனவேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்தனர்.
    • புகாரின் பேரில் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    சின்னாளப்பட்டி:

    திண்டுக்கல் அருகே உள்ள சின்னாளப்பட்டியில் அரசு உதவி பெறும் தனி யார் மகளிர் உயர்நிலை ப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் நேற்று முன்தினம் 9ம் வகுப்பு படிக்கும் 2 மாணவிகள் பினாயில் குடித்து மயங்கி கிடந்தனர். சக மாணவிகள் அளித்த புகாரின் பேரில் அவர்களை மீட்டு திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.

    ஆசிரியர்கள் மற்றும் மாணவிகள் தங்களை ஜாதியைச் சொல்லி திட்டிய தால் மனவேதனையடைந்து தற்கொலைக்கு முயன்றதாக பாதிக்கப்பட்ட மாணவிகள் தெரிவித்தனர்.

    இதனையடுத்து மாணவி களின் உறவினர்கள் மற்றும் கிராம மக்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகை யிட்டும், பள்ளி வாகனத்தை சிறை பிடித்தும் போராட்டம் நடத்தினர். இதனைத் தொடர்ந்து ஆர்.டி.ஓ. பிரேம்குமார், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் நாசருதீன், குழந்தைகள் பாதுகாப்பு திட்ட அதிகாரிகள் உள்ளிட்டோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

    தலைமை ஆசிரியை உள்பட மாணவிகளிடமும் விசாரணை நடத்தப்பட்டது. இந்நிலையில் பாதிக்கப்பட்ட மாணவியின் தாய் அளித்த புகாரின் பேரில் தலைமை ஆசிரியர், வகுப்பு ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர் உள்பட 5 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

    கணித ஆசிரியை பிரேமலதாவை பணியிடை நீக்கம் செய்தும், உடற்கல்வி ஆசிரியை ரம்யாவை கட்டாய விடுப்பில் அனுப்பி யும் பள்ளி நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. வழக்குப்பதிவு செய்த 5 பேரும் எப்போது அழை த்தாலும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்று போலீசார் தெரிவித்து சென்றனர். மேலும் குற்றம் நிரூபிக்கப்பட்டால் துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் தெரிவித்தனர்.

    Next Story
    ×