என் மலர்
உள்ளூர் செய்திகள்

மாணவர் முருகராஜிக்கு கல்வி உதவித்தொகையை ராஜா எம்.எல்.ஏ. வழங்கிய காட்சி.
சங்கரன்கோவில் அருகே நீட் தேர்வில் வெற்றி பெற்ற மாணவருக்கு நிதி உதவி- ராஜா எம்.எல்.ஏ. வழங்கினார்
- நீட் தேர்வில் 572 மதிப்பெண்கள் பெற்ற முருகராஜிக்கு விருதுநகர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது.
- முருகராஜிக்கு முதற்கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
சங்கரன்கோவில்:
சங்கரன்கோவில் சட்டமன்ற தொகுதி மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றியம் நவநீதகிருஷ்ணாபுரம் கிராமத்தில் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான சண்முகச்சாமி-வள்ளியம்மாள் தம்பதியினரின் மகன் முருகராஜ் நீட் தேர்வில் 572 மதிப்பெண்கள் பெற்று விருதுநகர் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க இடம் கிடைத்துள்ளது. அதைத்தொடர்ந்து முருகராஜிக்கு முதற்கட்டமாக தென்காசி வடக்கு மாவட்ட தி.மு.க. சார்பில் கல்வி உதவித்தொகை வழங்கப்பட்டது.
தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் ராஜா எம்.எல்.ஏ. கல்வி செலவுக்காக ரூ.10 ஆயிரமும், மேலநீலிதநல்லூர் கிழக்கு ஒன்றிய செயலாளர் பெரியதுரை ரூ.10 ஆயிரமும், மாவட்ட விளையாட்டு மேம்பாட்டு அணி அமைப்பாளர் காசிராஜன் ரூ.5 ஆயிரமும் வழங்கினர். மேலும் வரும் காலங்களிலும் கல்வி உதவித்தொகை அளிக்கப்படும் என்பதையும் ராஜா எம்.எல்.ஏ. தெரிவித்து மருத்துவ கல்லூரி மாணவர் முருகராஜை ஊக்கப்படுத்தினார்.






