என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொம்மிடி புனித அந்தோணியார் தேவாலயத்தில் திருவிழா
- தேவாலயத்தில் திருவிழா நாளை தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.
- மாலை திருப்பலியும், இரவு 7 மணிக்கு மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது.
தருமபுரி,
தருமபுரி மாவட்டம், பொம்மிடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் தேவாலயத்தில் திருவிழா நாளை தொடங்கி வருகிற 12-ந் தேதி வரை நடைபெறுகிறது.
இந்த விழாவையொட்டி நாளை மாலை 5 மணி அளவில் திருதந்தை தேர்ந்த தென் இந்தியாவின் புதிய கர்தினால் அந்தோணி பூளப்பா தலைமையில் கொடியேற்றும் நிகழ்ச்சி நடைபெறுகிறது.
இதைத்தொடர்ந்து (5-ந்தேதி) திங்கட்கிழமை அன்று குணமளிக்கும் நற்கருணை ஆராதனை மற்றும் நவநாள் திருப்பலி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியில் பிலிகுண்டு புனித அந்தோணியார் ஆலய அருள் ஜோதி மற்றும் அருட்பணி மோசஸ், அருட்பணி ராபர்ட் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
மேலும் 6-ந் தேதி முதல் 12-ந் தேதி வரை ஆகிய நாட்களில் தொடர்ந்து நவநாள் திருப்பலி நிகழ்ச்சி நடக்கிறது. இதில் சோகத்தூர் கார்மேல் தியான ஸ்டீபன், கடகத்தூர் புனித ஜோசப் இருளகுருமடம் ஆரோக்கிய சவரியப்பன், தாசரபள்ளி கிறிஸ்து அரசர் ஆலய அதிரூபன் நோலஸ், பி.பள்ளிப்பட்டி கார்மேல் அன்னை ஆலய தேவசகாயம், அரூர் புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி பால் பெனடிக்ட், பொம்மிடி கோடி அற்புதர் புனித அந்தோணியார் திருத்தல இறைமக்கள், தென்கரைக்கோட்டை கார்மேல் அன்னை ஆலய வினோத் லூயிஸ் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
8-ந்தேதி அன்று இரவு 8 மணி அளவில் கலைநிகழ்ச்சிகள் நடக்கிறது. 11-ந்தேதி இரவு 8- மணி அளவில் புனிதரின் புதுமைகள் என்கிற நிகழ்ச்சி நடக்கிறது.
13-ந்தேதி காலை 8 மணி அளவில் ஆடம்பர திருவிழா திருப்பலி, புதுநன்மை, றுதி பூசுதல் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் தருமபுரி மறை மாவட்ட ஆயர் லாரன்ஸ் பயஸ் கலந்து கொள்கிறார். நண்பகல் 12 மணி அளவில் திருப்பயணிகளுக்கான சிறப்பு திருப்பலி நடக்கிறது.
இதில் பாப்பிரெட்டிப்பட்டி அன்னை வேளாங்கண்ணி ஆலய ஜான்பீட்டர் கலந்து கொள்கிறார். மாலை 5 மணி அளவில் வேண்டுதல் திருப்பலியும், இரவு 7 மணி அளவில் தேர் மந்திரிப்பு நிகழ்ச்சியும் நடக்கிறது. இதில் தருமபுரி மறை மவாட்ட முதன்மை அருள்ராஜ், விழுப்புரம் எம்மாவூஸ் ஆன்மீக மைய இயக்குநர் பன்னீர் செல்வம் ஆகியோர் கலந்து கொள்கிறார்கள்.
14-ந்தேதி நள்ளிரவு 1 மணி அளவில் கொடியிறக்கம் மற்றும் நற்கருணை ஆராதனையும், மாலை 7 மணி அளவில் திருப்பலி முடிகிறது. இந்த நிகழ்ச்சியில் தலைவர் டாக்டர் ரமேஷ், பொருளாளர் ஆண்டனி, செயலாளர் ஜோலுயிலி, ஜான் அக்பர், புஸ்பாராஜ் மற்றும் சியோனின் சிகரங்கள் உறுப்பினர்கள், இளைஞர்கள், இளம்பெண்கள், இளம் பங்கு மக்கள் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.
இந்த நிகழ்ச்சியின் முடிவில் பொம்மிடி ஆரோக்கிய ஜேம்ஸ் நன்றி கூறுகிறார்.






