என் மலர்
உள்ளூர் செய்திகள்

எலத்தகிரியில் 36 ஆண்டுகளாக பணியாற்றி ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா
- கிருஷ்ணகிரி அருகே ஓய்வு பெற்ற ஆசிரியருக்கு பாராட்டு விழா நடந்தது.
- அவர் 36 வருடங்கள் கல்விப்பணி புரிந்துள்ளார்.
கிருஷ்ணகிரி,
கிருஷ்ணகிரி மாவட்டம் எலத்தகிரியில் அரசு நிதியுதவி பெறும் புனித அந்தோணியார் மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது.
இந்த பள்ளியில் கடந்த 1986-ம் ஆண்டு விலங்கியல் முதுகலை ஆசிரியராக பணியில் சேர்ந்த சேவியர்ஞானதாஸ், கடந்த 30-ந் தேதி வரை 36 ஆண்டுகள் பணிபுரிந்து பணி நிறைவு பெற்றார். இவரின் பணியை பாராட்டி பள்ளி வளாகத்தில், பணி நிறைவு பாராட்டு விழா நடந்தது.
இதில், கிருஷ்ணகிரி மறை மாவட்ட முதன்மை குரு அருட்தந்தை ஜார்ஜ், மறை மாவட்ட ஆயர் சார்பாக வாழ்த்துரை வழங்கி, பாராட்டினார். பள்ளியின் தாளாளர் தந்தை மரியப்பன், பள்ளியின் சார்பாக நினைவு பரிசு வழங்கி வாழ்த்தி பேசினார். பள்ளியின் தலைமை ஆசிரியர் அருட்தந்தை மைக்கேல்ராஜ், ஆசிரியை வாழ்த்தி, அவரது பணியினை புகழ்ந்து பாராட்டினார்.
மேலும், பள்ளியின் 55 ஆசிரியர்களின் சார்பாக வாழ்த்துபாடல், சிறப்புரை நிகழ்த்தப்பட்டு, நினைவு பரிசு வழங்கி பாராட்டினர். ஆசிரியரை முன்னாள் மாணவர்கள், ஓய்வுபெற்ற ஆசிரியர்கள் வாழ்த்தி பாராட்டினர்.
இறுதியில் பணி நிறைவு பெற்ற ஆசிரியர் சேவியர்ஞானதாஸ் ஏற்புரையாற்றினார்.
இதில் பள்ளி ஆசிரிய, ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.






