என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திருட்டு வழக்கில் மகன் கைதானதால் தந்தை தற்கொலை
    X

    கோப்புப்படம்.

    திருட்டு வழக்கில் மகன் கைதானதால் தந்தை தற்கொலை

    • மகன் கைது செய்யப்பட்டதால் விரக்தியில் இருந்த ஆசைத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
    • மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    தேனி:

    தேனி அருகே உள்ள பழனிசெட்டிபட்டி தெற்கு ஜெகநாதபுரம் காந்தாரியம்மன் கோவில் தெருவைச் சேர்ந்தவர் ஆசைத்தம்பி (வயது 45). இவருக்கு வைரமணி என்ற மனைவியும், கவுதம் என்ற மகனும் தாரணி என்ற மகளும் உள்ளனர். ஆசைத்தம்பி ஆட்டோ ஓட்டி பிழைப்பு நடத்தி வருகிறார். கடந்த சில நாட்களுக்கு முன்பு கவுதம் திருட்டு வழக்கில் போலீசாரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    இதனால் மன வேதனையில் இருந்த ஆசைத்தம்பி 3 நாட்களாக வீட்டுக்கு வராமல் இருந்துள்ளார். அவரது மனைவி தேடிப்பார்த்தபோது எங்கே உள்ளார்? என தெரியவில்லை. இந்நிலையில் அன்னஞ்சி விலக்கு பகுதியில் ஆட்டோவுக்குள் ஆசைத்தம்பி இறந்து கிடப்பதாக அவரது மனைவிக்கு தகவல் கிடைத்தது.

    இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்து அல்லிநகரம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். மகன் கைது செய்யப்பட்டதால் விரக்தியில் இருந்த ஆசைத்தம்பி விஷம் குடித்து தற்கொலை செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.

    மேலும் இது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×