என் மலர்
உள்ளூர் செய்திகள்

நீலகிரியில் 6-வது நாளாக தொடரும் உண்ணாவிரதம்
- தேயிலை இலைகளை காதில் தொங்க விட்டு நூதன போராட்டம்
- ஊட்டியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் உண்ணாவிரதம் நடக்கிறது
அரவேணு,
நீலகிரி மாவட்டத்தில் பச்சை தேயிலைக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயிக்க கோரி அங்கு உள்ள விவசாயிகள் கோத்தகிரியில் நட்டக்கல் பகுதியில் கடந்த 1-ந்தேதி முதல் உண்ணாவிர போராட்டம் நடத்தி வருகின்றனர். இங்கு தற்போது 6-வது நாளாக போராட்டம் தொடர்ந்து வருகிறது.
கோத்தகிரி நட்டக்கல் பகுதியில் நேற்று 5-ம்நாள் போராட்டம் நடந்தது. பொரங்காடு சீமை படுகர் நலச்சங்க தலைவர் தியாகராஜன் தலைமை தாங்கினார். பெத்தளா ஊர்தலைவர் கிருஷ்ணன், ஆரூர் தலைவர் முருகன், பையங்கி தலைவர் மனோகரன், குன்னியட்டி தலைவர் ராஜூ, அட்டவளை தலைவர் ஆண்டி, நரிகிரி சந்திரன் ஆகிபோர் தொடங்கி வைத்தனர்.
5-வது நாள் உண்ணா விரத போராட்டத்தில் 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். அப்போது அவர்கள் தேயிலை தழைகளை காதில் மாட்டிக் கொண்டும், கைகளை ஏந்தியும் போராட்ட பந்தலில் அமர்ந்து இருந்தனர்.
ஊட்டி பகுதியில் உள்ள சோலூர் கள்ளக்கொரை பகுதியிலும் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. மேலும் பெத்தளா, பையங்கி, குன்னியட்டி, அட்டவளை, நரிகிரி ஆகிய கிராமங்களில் உள்ள விவசாயிகள் தோட்டத்தில் தேயிலை பறிக்க செல்லாமல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.






