search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    திண்டுக்கல்லில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை
    X

    கொப்பரை தேங்காய்களை உலரவைக்கும் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள்.

    திண்டுக்கல்லில் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சியால் விவசாயிகள் கவலை

    • கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.
    • தேங்காய் சார்ந்துள்ள தொழில்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகே சாணார்பட்டி, சிலுவத்தூர், வேம்பார்பட்டி, நத்தம், பரளி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டுள்ளது. தென்னையில் இருந்து பறிக்கப்படும் தேங்காய்கள் தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்பட்டு வந்தது.

    இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்துள்ளது.இதனால் கோபால்பட்டி அருகே வேம்பார்பட்டியில் தேங்காய்கள் களத்தில் உடைத்து காயப்போட்டு கொப்பரைகளாக மாற்றம் செய்யப்பட்டு காங்கேயம் மற்றும் வெள்ளக்கோவில் வெளி மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படுகிறது.இந்நிலையில், தேங்காய் மற்றும் கொப்பரை விலை தொடர்ந்து சரிந்து வருவதால் இந்த பகுதிகளில் உள்ள விவசாயிகள் புதிதாக தென்னங்கன்று நடவு செய்வதில் ஆர்வம் காட்டவில்லை.

    இதுகுறித்து வேம்பார்பட்டி விவசாயிகள் கூறுகையில் தொடர்ந்து மழை பெய்து வருவதாலும் கொப்பரை தேங்காய் விலை வீழ்ச்சி அடைந்து வருகிறது.இதன் காரணமாக தோட்டங்களில் கொப்பரை தேங்காய் மற்றும் தேங்காய்கள் இருப்பு வைக்கப்படுகிறது.தேங்காய் சார்ந்துள்ள தொழில்கள் தொடர்ந்து நஷ்டத்தில் இயங்கி வருவதால் விவசாயிகள் வேதனைக்கு உள்ளாகியுள்ளனர்.

    முன்பு தேங்காய் சராசரியாக காய் ஒன்றுக்கு ரூ.10 முதல் ரூ.12 வரை இருந்தது. தற்போது ரூ.8 -க்கு விற்பனையாகி வருகிறது.கடந்த சில மாதங்களுக்கு முன்பு சராசரியாக ரூ.13-க்கு கொள்முதல் செய்யப்பட்டது.

    தற்போது வெளிமார்க்கெட்டில் அதிகபட்சமாக ஒரு கிலோ ரூ.65-க்குமட்டும் கொள்முதல் செய்யப்படுகிறது.முன்பு ரூ.120-க்கு மேல் கொள்முதல் விலை இருந்தது.தொடர்ந்து கொப்பரை மற்றும் தேங்காய் விலை சரிந்து வருகிறது.ஆனால், தென்னை பராமரிப்பு செலவு, உரச்செலவு தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    ஆகவே அரசு உடனடியாக இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். கொப்பரை தேங்காய் ஏற்றுமதிக்கு அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றனர்.

    Next Story
    ×