search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    விற்பனை ஆகாததால் கரும்புகளை சாலையிலேயே போட்டுச்சென்ற விவசாயிகள்
    X

     வீரபாண்டி பிரிவு பேருந்து நிறுத்தத்தில் விற்பனை ஆகாமல் அப்படியே விட்டுச்சென்றுள்ள கரும்புகள்.

    விற்பனை ஆகாததால் கரும்புகளை சாலையிலேயே போட்டுச்சென்ற விவசாயிகள்

    • 2ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.
    • கரும்புகள் விற்பனை இந்த ஆண்டு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    வீரபாண்டி :

    பொங்கல் பண்டிகையையொட்டி திருப்பூர் முழுவதும் அதிக அளவில் கரும்புகள் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டன.சரியான விற்பனை இல்லாத காரணத்தால் ஆங்காங்கே கட்டு கட்டாக கரும்புகள் விற்பனையாகாமல் அப்படியே விட்டு சென்றுள்ளார்கள். 2ஆண்டுகளாக கொரோனா தாக்கத்தால் பொங்கல் பண்டிகை சிறப்பாக கொண்டாட முடியவில்லை.

    இந்த ஆண்டு பொங்கல் பண்டிகை சிறப்பாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பில் திருச்சி, எடப்பாடி, சேலம் உள்ளிட்ட ஊர்களிலிருந்து அதிக அளவில் கரும்புகள் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டன. பல்லடம் ரோடு,அவினாசி ரோடு ,காங்கேயம் ரோடு, ஊத்துக்குளி ரோடு உள்ளிட்ட மாநகரின் முக்கிய ரோடுகள் மற்றும் மார்க்கெட் வீதியில் கரும்புகள் கட்டு கட்டாக குவிக்கப்பட்டன.

    பொங்கலுக்கு முந்தைய நாளும் பொங்கல் அன்றும் ஓரளவுக்கு கரும்புகள் விற்பனை செய்யப்பட்டன. ஆனால் கடந்த காலங்களில் போன்று இந்த ஆண்டு கரும்புகள் விற்பனை இல்லை என்று வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சுமார் 50 சதவீதம் அளவு கரும்புகள் விற்பனை இந்த ஆண்டு குறைந்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்தனர்.

    முதலில் ஒரு ஜோடி கரும்பு 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்பொழுது 6 முதல் 8 கரும்புகள் வரை 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகின்றன. இதனால் பலர் கரும்புக்கட்டுகளை சாலைகளில் அப்படியே விட்டு விட்டு சென்று விட்டனர். எதிர்பார்த்த விற்பனை இல்லாததால் கரும்புகளின் இலை மட்டுமின்றி வியாபாரிகளின் மனமும் வாடிப்போய் உள்ளது.

    Next Story
    ×