search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மழையின்றி நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு ஆண்டிபட்டி பகுதியில் லாரி தண்ணீர் மூலம் பயிரை காப்பாற்றும் விவசாயிகள்
    X

    ஆண்டிபட்டி - ஏத்தகோவில் சாலையில் கூத்தமேடி கிராமத்தில் டிராக்டரில் தண்ணீர் கொண்டு வந்து பயிர்களை காப்பாற்றி வருகின்றனர்.

    மழையின்றி நிலத்தடி நீர் மட்டம் பாதிப்பு ஆண்டிபட்டி பகுதியில் லாரி தண்ணீர் மூலம் பயிரை காப்பாற்றும் விவசாயிகள்

    • கண்டமனூர், வருசநாடு, அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாத தால் மூல வைகை ஆறு வறண்டு அப்பகுதி கிரா மங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
    • இப்பகுதியில் மழை இல்லாததால் நில த்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    ஆண்டிபட்டி:

    ஜூன் மாத தொடக்கத்தில் தென் மேற்கு பருவமழை தொடங்கும். அப்போது கேரளா மற்றும் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்யும் மழையால் தேனி மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது. இந்த ஆண்டு பருவமழை தாமதமாக தொடங்கியது. மேலும் போதிய அளவு மழைப்பொழிவு இல்லை. இதனால் முல்லைப்பெரி யாறு, வராக நதி, கொட்ட க்குடி, மூல வைகை ஆறு உள்ளிட்ட பெரும்பாலான ஆறுகளின் நீர் வரத்து குறைவாக உள்ளது.

    குறிப்பாக கண்டமனூர், வருசநாடு, அரசரடி, வெள்ளிமலை உள்ளிட்ட பகுதிகளில் மழை இல்லாத தால் மூல வைகை ஆறு வறண்டு அப்பகுதி கிரா மங்களுக்கு குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. உறை கிணறுகளில் தண்ணீர் குறைவாக உள்ளதால் தூர் வாரும் பணிகள் நடை பெற்று வருகிறது. இந்த நிலையில் ஆண்டிபட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை இல்லாத தால் வறண்ட நிலையே காணப்படுகிறது. இப்பகுதி யில் வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை விவசாயிகள் பயிரிட்டுள்ளனர்.

    தற்போது நிலத்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்க ப்பட்டுள்ளது. மேலும் கிணறுகளிலும் தண்ணீர் இல்லாததால் பயிர்கள் கருகும் நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் லாரிகள் மூலம் தண்ணீர் கொண்டு வந்து பயிர்களை காப்பாற்றும் நிலை ஏற்பட்டுள்ளது. இது குறித்து விவசாயிகள் கூறுகையில், இப்பகுதியில் மழை இல்லாததால் நில த்தடி நீர் மட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் குடிநீருக்காக அலைந்து திரியும் நிலை ஏற்பட்டுள்ளது.

    இந்த நிலையில் பயிர்க ளை காப்பாற்ற டிராக்டர் மூலம் தண்ணீரை விலைக்கு வாங்கி பயிர்களை காப்பாற்றி வருகிறோம். மழை கைகொடுத்தால் மட்டுமே விவசாயத்தை தொடர முடியும். மேலும் அதிக அளவில் பணம் செலவழித்து வெங்காயம் உள்ளிட்ட காய்கறிகளை பயிரிட்டு வருகிறோம். ஆனால் இதற்கான விலை கிடைப்பதில்லை. எனவே அரசு விலை நிர்ணயம் செய்ய வேண்டும்.

    வறட்சி காலத்தில் விவ சாயிகளுக்கு உதவ நடவடி க்கை எடுக்க வேண்டும் என்றனர்.

    Next Story
    ×