search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    தரமற்ற விதை நெல்லால் 120 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு- விவசாயிகள் போராட்டம்
    X

    தரமற்ற விதை நெல்லால் 120 ஏக்கர் நெற்பயிர் பாதிப்பு- விவசாயிகள் போராட்டம்

    • நாற்று நட்டு 4 மாதங்கள் ஆகியும் நெல்மணிகள் வரவில்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர்.
    • தரமற்ற விதை நெல்லால் சுமார் 120 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மலட்டுத்தன்மை அடைந்து விட்டது.

    பொன்னேரி:

    பொன்னேரி அருகே உள்ள பெரிய முல்லைவாயல், புதுப்பாக்கம், கும்மனூர் உள்ளிட்ட 20 க்கும் மேற்பட்ட கிராம மக்களை சேர்ந்தவர்கள் விவசாய தொழில் செய்து வருகிறார்கள்.

    இவர்கள், அருமந்தை பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் விவசாய பொருட்கள் விற்பனை செய்யும் கடையில் கிலோ ரூ.85 -க்கு ஏ.ஜி.ஆர். என்ற விதை நெல்லை வாங்கி நெற்பயிர் சாகுபடி செய்து இருந்தனர்.

    இந்த நிலையில் நாற்று நட்டு 4 மாதங்கள் ஆகியும் நெல்மணிகள் வரவில்லை. இதனால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்து உள்ளனர். கடையில் விற்கப்பட்டது தரமற்ற மலட்டு விதை நெல் என்பது தெரிந்தது.

    இதுகுறித்து விவசாயிகள் வேளாண்துறை அதிகாரிகளிடம் புகார் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் சோழவரத்தில் உள்ள வேளாண்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். தரமற்ற விதை நெல்லை சந்தையில் புழக்கத்தில் விட்டவர்கள் மற்றும் இதற்கு துணைபோன அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    தரமற்ற விதை நெல்லால் சுமார் 120 ஏக்கர் பரப்பளவிலான நெற்பயிர்கள் மலட்டுத்தன்மை அடைந்து விட்டது. இதனால் ஏக்கர் ஒன்றுக்கு ரூ.35 ஆயிரம் வரை இழப்பு ஏற்பட்டுள்ளது.

    எனவே அரசு விவசாயிகள் அனைவருக்கும் இழப்பீடு தொகை வழங்கவேண்டும்.

    மேலும் முறையாக ஆய்வு செய்யாமல் மலட்டு விதை நெல்லை சந்தைப்படுத்திய தனியார் நிறுவனத்திற்கு தரச்சான்று வழங்கிய சம்பந்தப்பட்ட வேளாண் துறை அதிகாரிகள் மற்றும் நிறுவனத்தின் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட வயல்களை வேளாண்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இதுபற்றி நடவடிக்கை எடுப்பதாக அவர்கள் விவசாயிகளிடம் தெரிவித்து உள்ளனர்.

    Next Story
    ×