என் மலர்
உள்ளூர் செய்திகள்

பரமத்தி வட்டார விவசாயிகள் வேளாண் அடுக்கு திட்டத்தில் பயன்பெற அழைப்பு
- மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.
- 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்டப்பலன்களும் கிடைக்கச் செய்யும் வகை யில், விவசாயி களுடைய விவரங்கள் குறிப்பாக நில உடமை விவ ரம் உள்ளிட்டவை சரி பார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
பரமத்திவேலூர்:
பரமத்தி வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் கோவிந்தசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-
மத்திய, மாநில அரசுகள் விவசாயிகளின் நலனுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக வேளாண் அடுக்கு என்ற திட்டத்தினை செயல்படுத்த உள்ளது.
வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை, வேளாண்மை துறை, தோட்டக்கலைத் துறை, கூட்டுறவுத்துறை, பட்டு வளர்ச்சி துறை, உணவு வழங்கல் துறை, வேளாண் பொறியியல் துறை, ஊரக வளர்ச்சி துறை, கால்நடை பராமரிப்பு துறை, வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிக துறை, விதை சான்ற ளிப்பு துறை, சர்க்கரை துறை உள்ளிட்ட 13 துறைகளில் அனைத்து விவசாயிகளுக்கும் அனைத்து திட்டப்பலன்களும் கிடைக்கச் செய்யும் வகை யில், விவசாயி களுடைய விவரங்கள் குறிப்பாக நில உடமை விவ ரம் உள்ளிட்டவை சரி பார்க்கப்பட்டு வலைதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டு வருகிறது.
இதில் அந்தந்த கிரா மங்களின் கிராம நிர்வாக அலுவலர்கள், உதவி வேளாண்மை அலுவலர்கள், உதவி தோட்டக்கலை அலுவ லர்கள் இந்த பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
எனவே விவசாயிகள் அனைவரும் தங்களது நில உடமை ஆவணம், ஆதார் அட்டை நகல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தகம் ஆகிய வற்றுடன் உரிய கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்களை தொடர்பு கொண்டு விவரங்களை சரிபார்த்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் அதில் தெரிவித்துள்ளார்.






